Thursday, June 15, 2017

லண்டன் தீ விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்!

லண்டன் கிரீன்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இஸ்லாமியர்களே தீ விபத்தில் சிக்க இருந்த பல மக்களை காப்பாற்றினர் என அந்த அடுக்குமாடி குடுயிருப்பில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரமலான் நோன்புக்காக அதிகாலையிலேயே (நள்ளிரவு 1-2 மணி) எழுந்து கடவுளை தொழுவதை வழக்கமாக கொண்ட அவர்கள், அன்றிரவு நடந்த தீ விபத்தை முதலில் பார்த்ததும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தீ விபத்து ஏற்பட்டு இருப்பதை குறித்து எச்சரிக்கை மணி அடித்து வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர்.

பிற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் தீ எச்சரிக்கை ஒலி கேட்காமல் உறக்கத்தில் இருந்த சமயம் ரமலான் நோன்புக்கு விழித்த முஸ்லிம்கள் உடனடியாக விரைந்து பல நூறு உயிர்களை காப்பாற்றியுள்ளதாக அந்த அடுக்குமாடி குடிவாசி அண்ட்ரூ பார்ரஸோ தெரிவித்துள்ளார். 1974ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம், சமீபத்தில் தான் சரி செய்யப்பட்டு மீண்டும் குடியமர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த சம்பவம் குறித்து இஸ்லாமியர் ஒருவர் கூறும்போது, ரமலான் மாதத்தில் நாள் முழுவதும் நோன்பு இருப்பதால் நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை நோன்பு திறக்கப்படும். அதாவது 1 மணி முதல் 2 மணி வரை நோன்பு இருப்பவர்கள் உணவு உண்பார்கள். அப்பொழுது அவர்கள் விழித்திருந்து தொழுகை செய்வதும் வழக்கம். புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் உணவு உண்பதற்காக விழித்திருந்த இஸ்லாமியர்கள் கிரீன்ஃபெல் டவரில் தீ விபத்தை புகை மூட்டத்தின் மூலம் கண்டறித்து அங்கிருந்தவர்களை காப்பாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

பெஸ்ட் வாட்டர்

பெஸ்ட் வாட்டர்!

கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும்,  மதிய உணவு ஓட்டல்,  நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள்.  வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .

சரி கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்.....  எங்கும். எதிலும்.
கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான்.   பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்.. 

சரி என்று அவர்கள் என்னதான்  போடுகிறார்கள் என்று தீர விசாரித்து அதையே மளிகை கடையில் கேட்டதில் கிடைத்தது இந்த 4 வித மூலிகை பொட்டலங்கள். 

இதில் அப்படி என்ன இருக்கிறது ?

அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)
ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.
இ)  கங்களி
இன்ன பிற மூலிகைகள்.

பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) பன்னாட்டு கம்பெனியின் மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள்.  மெச்ச வேண்டும்.

எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து ஊரில் இருக்கும் மலையாளத்தானை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ?  அடிப்போம்

இந்த பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 25/- முதல் 60/- வரை விற்கிறது.  5 லிட்டர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் போட்டால் போதும்.

Wednesday, June 14, 2017

ஆஸ்பிரின் மாத்திரைகளை தினமும் உட்கொள்வதால் ஆபத்து!

ஆஸ்பிரின் மாத்திரைகளை தினமும் உட்கொள்வதால், ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் மரணம் அடைவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதய நோய், பக்கவாதம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஆஸ்பிரின் மாத்திரையை உட்கொள்ள, சில மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகின்றனர். ரத்தம் கட்டியாவதை தடுக்கும் தன்மை கொண்டதால், இந்த மாத்திரையை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆனால் ஆஸ்பிரின் மாத்திரையை தினமும் சாப்பிடுவதால், ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் ரத்தப் போக்கு ஏற்பட்டு மரணம் அடைவதாக சமீபத்திய ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான முதியவர்கள் ஆஸ்பிரின் மாத்திரையை தினமும் உட்கொள்வதாகவும், இதனால் ஆண்டுக்கு 20,000 பேர் ரத்தப் போக்கால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலும் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், ஆஸ்பிரின் மாத்திரையை தினமும் உட்கொள்வதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Did the Hindus never eat beef?’

டாக்டர் அம்பேத்கரின், ‘Did the Hindus never eat beef?’ நூலிலிருந்து சில பகுதிகள், சுருக்கமான மொழிபெயர்ப்பில்.

"இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது!" - விவேகானந்தர் (The Complete Works of Swami Vivekanand, vol.3, p. 536).

"பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்" - ரிக் வேதம் (10/85/13)

"இந்திரனுக்கு பிடித்த இறைச்சி பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்". - ரிக் வேதம் (6/17/1)

"பரோபகரம் இடம் ஷரீரம்" என்பது இந்து தர்ம சாஸ்திரத்தின் கூற்றாகும். அதாவது இவ் உடல் இறைவனால் கொடுக்கப்பட்டதே, பிறருக்கு உதவவே! அதன் அடிப்படையில்...

இறைச்சிக்குரிய மிருகங்களை மனிதர்கள் உண்ணுவது பாவமில்லை. உண்ணுபவர்களையும் உணவுகளையும் பிரம்மனே படைத்தான். - மனு ஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 30)

அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன், 21 ஜென்மங்களுக்கு, பலியிடும் விலங்காக உருவெடுப்பான். - மனு ஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 35)

ஒரு பிராமணர், வழிபாட்டின்போது தனக்குக் கொடுக்கப்பட்ட இறைச்சியை உண்ண மறுத்தால் நரகம் செல்வார்.
வசிஷ்ட முனிவர் (11/34)

விருந்தினர் வந்தால் பசு மாட்டின் இறைச்சி அளிப்போம். - அபஸ்டாம் கிரிசூத்திரம் (1/3/10)

மிக மிருதுவாகவும், சுவையாகவும் இருப்பதால் பசு மாட்டிறைச்சியை உண்கிறேன். - இராமாயணத்தின் மகரிஷி யாக்யவல்க்கியர் (சீதையின் தந்தையின் குரு) சத்பத் பிராமணம் (3/1/2/21)

Thursday, May 26, 2011

மழை மனிதனுக்கு கற்றுத்தரும் பாடம்



உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக....

நாம் இந்த பதிவில் எடுத்திருக்கும் தலைப்பு மழை, வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை.


சரி முதலில் மழை (Rain) எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம்.
வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி  நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி இப்படி ஒரு சுழற்சியாக நடைபெறும் இந்த நிகழ்வை நீர் சுழற்சி (The Water Cycle) என்று குறிப்பிடுவர்.


மழை பெய்வதினால் உயிரினங்களுக்கு பலவகையான நன்மைகள் உள்ளன, மழை உயிர் வாழ்வதற்கான ஆதாரம், ஆனால் இந்த மழை சிலகாலம் இல்லையெனிலும் உணவு பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை நாமே கண்ணெதிரே பார்க்கிறோம். மழை என்பதே இல்லையெனில் அதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று சொல்லதேவை இல்லை அனைவரும் அறிந்ததே உயிரினங்கள் வாழவே முடியாத அளவிற்கு பூமியின் வெப்பம் அதிகமாகிவிடும். ஒரு பக்கம் முழுவதும் வெப்பமாகவும் ஒரு பக்கம் முழுவதும் கடல் நீராகவும் இருக்கும், அதாவது தற்போது இருக்கும் படியான சமநிலை படுத்தப்பட்ட பூமி இருக்கவே இருக்காது.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரில் மூழ்கி அழியவும் கூடாது ஆனால் அவை அனைத்திற்கும் இன்றி அமையாத தேவைக்காக நீரும் தரப்படவேண்டும் என்ற நிலையில் இந்த மழையை தவிர வேறு எது சிறந்த வழி என்னவென்று கூறுங்கள் பாப்போம். இது ஏனோ தானோ வென்று நடைபெறுகிறது என்ற சந்தேகமின்றி அனைத்தும் தீர திட்டமிட்டே நடைபெறுகிறது.

இது உண்மையில் மாபெரும் சக்தியின் உன்னதமான அருட்கொடை என்பதை சந்தேகமின்றி என்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே செல்வோம்.

கடவுள் மறுப்பாளர்கள் கூற்றுப்படி முதல் மழை எப்படி பெய்திருக்கவேண்டும், இயற்கையாக (!?) உருவான ஆக்சிஜன் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் தானாக ஒன்றிணைந்து நீர்த்துளி உருவாகி பின் ஒவ்வொரு நீர்துளியாக அதிகமாகி கடல் உருவாகி இருக்க பிறகு பூமியிலுள்ள வெப்பத்தின் காரணமாக அவைகள் தங்களின் தன்மையை அதாவது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு தானாக (!?) மாற்றி மேல் சென்று பிறகு பூமிக்கு தரவேண்டும்.


இவை அனைத்தும் தானாக உருவாகி இருக்குமானால் எப்படி இருக்கும் தெரியுமா? மேகம் எங்கு நீர் எடுக்கிறதோ அங்கு மட்டும் தான் மழை உருவாக வேண்டும், கடல், ஏரி, ஆறு போன்று நீர் உள்ள இடங்களிலிருந்து மேகம் நீர் எடுக்கிறது, உதாரணமாக கடல் நீர் மேகமாக மாருமானால் மழை கடலில் மட்டும் தான் பெய்யவேண்டும், அவ்வாறா நடக்கிறது இப்பூவுலகில், அதற்காக கடவுள் கொடுத்த ஒரு அமைப்புதான் காற்றில் மேகம் நகருதல்,எங்கிருந்து அது நீர் எடுத்தாலும் சுழன்று கொண்டு அனைத்து இடங்களுக்கும் மழையை தருகிறது, நம் ஊரில் உள்ள தண்ணீர் வண்டி என்ன செய்கிறது, அசுத்தமான நீரை சுத்தபடுத்தி அதை ஒரு வண்டியில் ஏற்று ஊர் முழுவதுமாக வளம் வருகிறது எங்கு தண்ணீர் வேண்டுமோ அங்கு அளிக்கிறது, இதே வேலையை செய்யத்தான் மழை என்ற ஒன்றை கடவுள் ஏற்படுத்தி தேவை படும் இடங்களில் பொழிய செய்கிறார், இந்த அமைப்பு எதற்காக நடக்கிறது அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்ற காரணத்திற்காக.

மேகத்தின் வேகம் என்பது இந்த பூமி சுழற்சியின் வேகத்தைவிட அதிகம் என்று கூட கூறலாம், ஏனெனில் பூமி தான் சுற்றும் போது தன்னுடைய வலிமண்டலதையும் இழுத்துக்கொண்டு சுற்றுகிறது, மேகம் என்பது பூமியின் வலிமண்டலத்தில் தான் உள்ளது. உதாரணமாக ஒருவர் மணிக்கு 10 கி மி வேகத்தில் நடக்கிறார் என்றால் அவர் உண்மையில் பூமியின் சுழற்சியையும்(529.75 kmph) சேர்த்து 539.75 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்கிறார் என்று தான் பொருள், இதை இங்கு நாம் குருப்பிடுவதற்கான காரணம் பூமிதான் சுற்றுகிறதே மேகம் எதற்காக நகர வேண்டும், அப்படி நகராமல் ஒரே இடத்தில் இருந்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா தண்ணீர் இருக்கும் இடங்களில் மட்டுமே மழை கிடைக்கும், அப்படியெனில் உயிரினங்கள் இருக்குமா, நாம் தற்போது இருப்பது போன்ற எந்த குறையும் இல்லாமல் வாழ முடியுமா? இந்த தத்துவத்தை பார்க்கும், சிந்திக்கும் ஒரு மனிதன் என்ன உணருவான் இப்பூமியில் உயிரினங்களை வாழவைக்க மறைமுகமாகவோ அல்லது நேராகவோ ஒரு சக்தி உதவுகிறது என்று அடிப்படை நிலையை ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும், இல்லையெனில் மேகம் எதற்காக நகரவேண்டும் மழை எதற்காக பொழிய வேண்டும், இது போன்ற நாம் உணரவே முடியாத இவ்வுலகையும் இந்த தத்துவங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கும் அந்த மாபெரும் சக்தியை அரைகுறையாக கூட உணரமட்டோம்.


இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் தற்போதைய அறிவியல் படி  மழை பெய்ய மேகம் உருவானால் மட்டுமல்லாமல் ஏர்பான்(Airborne) என்ற ஒரு வகையான பாக்டீரியாவின் பங்கும் அதிகம் உள்ளதாம். உயிர்களை வாழவைக்க உதவுவது நுண்ணுயிரிகள், பூமியில் நீர் இல்லையெனில் உயிரினங்கள் இல்லை, நீர் இல்லையெனில் கடல் இல்லை, கடல் இருந்தாலும் வெப்பம் இல்லையெனில் மேகம் இல்லை, மேகம் இருந்தும் புவி ஈர்ப்பு விசை இல்லையெனில் மழை இல்லை. சுருங்க சொல்வதென்றால் ஒன்றில்லையேல் ஒன்றில்லை என்ற மிகவும் சிக்கலான ஆயிரக்கணக்கான அமைப்பை வைத்து கொண்டு இதுதான் முதலில் வந்தது அதுவும் தானாக வந்தது என்ற வாதம் எந்த அளவிற்கு அறிவுடையதாக இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.


பொதுவாக வெள்ளம் வறட்சி ஏற்படுதல் என்பது எப்போது என்பது நாம் அறிந்ததே இயற்கைக்கு முரணான (அதாவது உலக அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் பொழுது) இவைகள் நடைபெறும், குளோரோ ப்லோரோ கார்பன் அதிகமாக வெளியிடும் பொழுது, ஒரே இடத்தில் சுரங்கம் தண்டவாளம் போன்றவைகளுக்காக குண்டு வெடிப்புகளால் தொண்டபடுதல் போன்ற இயற்கை அமைப்பை சிதைக்கும் போதுதான் நமக்கு வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற பெரிய பாதிப்புகள் நடைபெறும். இதிலிருந்து நாம் விளங்கி கொள்வது மேலே குறுப்பிட்ட இந்த இயற்கை அமைப்பு என்பது எவ்வாறு ஏற்பட்டது. தானாக உருவான ஒன்று அதன் அமைப்பை மாற்றும் போது எதற்காக எதிர்மறை விளைவை ஏற்படுத்த வேண்டும். சாதரணமாக எதிர்மறை விளைவை ஏற்படுத்தாத அமைதியான அமைப்பை அது எப்படி பெற்றது என்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும்.

இவைகள் அனைத்தும் நடப்பது ஒரு காரணம் இல்லாமலா? இதை பார்க்கும் போதே தெரியவில்லையா ஒரு சக்தி தான் இதை இயக்குகிறது என்று.

மழை எதற்காக பெய்கிறது என்று யாரிடமாவது கேட்டால் அதற்கு பதில் உயிரினங்களுக்காக என்றுதான் கூறுவார்கள், இது உலகில் அனைவரும் அறிந்த நியதி என்று கூட கூறலாம், இணையத்தில் மழை ஏன் பெய்கிறது என்ற கேள்வியை பற்றி தேடினால், எப்படி உருவாகிறது எங்கிருந்து பெய்கிறது, என்னென்ன வகைகள் அதில் உள்ளன என்ற பதிலெல்லாம் கிடைத்தது, என்னுடைய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்னுடைய கேள்வி:

மழை ஏன் பெய்கிறது? எதற்காக பெய்ய வேண்டும் என்பது தான்.


"அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்.  அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?  (அல் குர்ஆன் 32 : 27)"

References:

 

Share

Friday, February 4, 2011

யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்


நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87) அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181) அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64) அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46) அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுவது (3:75) பூமியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது, யுத்தச் சூழலை உருவாக்குவது (5:64) முஃமீன்களை கடும் பகைவர்களாகக் கருதுவது (3:118-119) ஒப்பந்தங்களை முறிப்பது (2:100) மார்க்கத்தை கேலிப் பொருளாகவும் விளையாட்டாகவும் கருதுவது (5:57) தடை செய்யப்பட்ட பொருள்களை உண்பது, மக்கள் சொத்தை முறைகேடாக உண்பது, வட்டியை உண்பது (4:161) உலக வாழ்வை அளவு கடந்து நேசிப்பது, மரணத்தை வெறுப்பது (2:96) ஈவு, இரக்கத்தைத் தொலைத்து எந்தப் பழிபாவத்துக்கும் அஞ்சாமல் மனதைக் கல்லாக இறுக வைத்துக் கொள்வது (5:13)

… இவையெல்லாம் யூதர்களின் குணங்களும் இழிவான செயல்களுமாகும் என்று அல்லாஹ் (சுபு)  தனது  திருமறைக் குர்ஆனில் அடையாளம் காட்டியிருக்கிறான்.
இந்த இழிகுணம் மற்றும் ஈனச் செயல்களின் காரணமாக வரலாற்றில் உலகின் எந்த பாகத்திலும் யூதர்கள் நிம்மதியாக வாழ்ந்ததுமில்லை, வாழவிடப்பட்டதும் இல்லை. உலகின் பலதேசங்களில் மன்னர்களின் ஆணைக்கிணங்கவே இவர்கள் கடுந்துன்பங்களுக்குள்ளாக்கப்பட்டார்கள்; அடித்து விரட்டப்பட்டார்கள். இதனால் மிக நீண்ட காலமாகவே இவர்கள் தங்களுக்கென ஒரு நாடு இல்லாமல் நாடோடிகளாகவே திரிந்தார்கள். இதன் விளைவாக நமக்கொரு நாடு வேண்டும்; நம்மை ஒடுக்கிய உலகத்தை நாம் மேலாதிக்கம் செய்து பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் 1700களின் மத்தியில் இவர்களுக்கு ஏற்பட்டு அதற்கான செயல்வடிவங்களும் ஏற்படத் தொடங்கின.
இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு 1760களிலிருந்து பல ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். அந்நிலையில் ஜெர்மனியில் வசித்துக் கொண்டிருந்த ’ஆதம்வைஸ் ஹாரிபட்’ என்ற யூத அறிஞர் 1776 ஆம் ஆண்டில் `பேரொளியாளர்களின் சங்கமம்’ என்ற பொருள்படும் இதழ் ஒன்றை யூதர்களிடையே ரகசியமாகச் சுற்றுக்கு விட்டு வந்தார். அவ்விதழில் “கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம் யூத இனம் மட்டுமே! ஆகவே அவர்களே இவ்வுலகை ஆளவும் ஆதிக்கம் செலுத்தவும் உரிமையுள்ளவர்கள்” என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்தி பல ஆக்கங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இது சிதறிக் கிடந்த யூதர்களை ஒருங்கிணைக்கப் பெரிதும் உதவியதுடன் அவர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களுக்கும் வலுசேர்த்தது.
1869ஆம் ஆண்டில் `ஹாஹாம் ஷெரோன்’ என்ற யூதரின் (ஹாஹாம் என்றால் யூதர்களின் மொழியில் ‘சித்தாந்த’ குரு என்று பொருள்) தலைமையில் “யூதர்களை ஒருங்கிணைப்பது, உலகை மேலாதிக்கம் செய்வது” என்ற தலைப்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஷெரோன் இப்படிக் கூறினார்.
யூதர்களாகிய நாம் இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய வேண்டுமானால் நமக்கு இரண்டு ஆற்றல்கள் தேவை. ஒன்று, ஏராளமான தங்கம். மற்றொன்று பத்திரிக்கை (அக்காலத்தில் தங்கம்தான் பணமாக புழக்கத்தில் இருந்தது என்பதையும் ஊடகமாக அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்)
ஷெரோனின் யோசனைக்கேற்ப யூதர்கள் ஏராளமான தங்கங்களை அதாவது பொருளாதாரத்தைச் சேமிக்கத் தொடங்கினார்கள். அதே சமயம் ஊடகங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். தாங்களே ஊடகங்களை உருவாக்குவது, வளர்ந்த ஊடகங்களில் ஊடுருவி தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது, பரவலான மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ள ஊடகங்களை விலைக்கு வாங்குவது என்று தொடங்கிய அவர்களின் ஊடக ஊடுருவல் இன்று மலைக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
உலகிலுள்ள மொத்த ஊடகங்களில் 25 சதவீத ஊடகங்கள் இன்று யூதர்களுக்குச் சொந்தம். அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வளர்ந்த, முன்னணி ஊடகங்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஊடகங்களில் 52 சதவீத ஊடகங்கள் யூதர்களுக்
குச் சொந்தம். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் வெளியாகும் முன்னணி இதழ்களில் பெரும்பாலானவை யூதர்களுக்குச் சொந்தம்.யூதர்கள் ஊடகங்களின் மீது மூன்று வழிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 1.ஊடகங்களை உருவாக்குவது, 2. வளர்ந்த ஊடகங்களை மட்டும் விலைக்கு வாங்குவது, 3. முன்னணி ஊடகங்களின் பங்குகளை அதிகமாக வாங்கிக் குவித்துக் கொள்வது.
அமெரிக்காவில் பெருவாரியான வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள “நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், டெய்லி நியூஸ்” ஆகிய நாளேடுகளின் 80 சதவீதப் பங்குகள் இன்று யூதர்களுக்குச் சொந்தமாகும்.
அதேபோல வாரம் ஒன்றுக்கு 5 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்க்கும் `டைம்’ வார ஏட்டின் பெரும்பான்மையான பங்குகளை ஜான்மேயர் என்ற யூதர் வைத்திருக்கிறார். மிகவும் பிரபலமான `நியூஸ் வீக்’ இதழை மால்கம் மேயர் என்ற யூதர் 1973 ஆம் ஆண்டில் வாங்கினார். அதன் நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் இன்று யூதர்களின் கையிலேயே இருக்கிறது.
`ஃபார்டுவர்டு’ என்ற வார இதழின் பெரும் பங்குகளை யூதர்கள் கட்டுப்படுத்துவது போலவே `நியூயார்க் போஸ்ட்’ என்ற நாளேட்டின் பெரும்பான்மைப் பங்குகளை நியூஸ்கார்ப்பரேஷனின் முதலாளியும் நம்ம ஊரு ஸ்டார், ஜீ குழுமத்தின் அதிபருமான `ரூபர்ட் முர்டோக்’ என்ற யூதர் கட்டுப்படுத்துகிறார்.
அமெரிக்காவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ள `வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழும் யூதர்களின் பிடியிலிருந்து தப்பவில்லை.
இந்த நாளிதழின் தலைமைப் பீடத்தில் 1933 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யூதர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதன் தொழிலாளர் நலன் நிருவாகக் கமிட்டியில் `லாரீ இஸ்ரேல்’ என்ற யூதர் தலைவராக இருந்து வருகிறார்.
அமெரிக்காவிலுள்ள நியூஆர்லியன்ஸ் நகரத்திலிருந்துவெளிவரும் ’பீகான்டைம்ஸ்’ என்ற நாளேட்டை நியூஹவுஸ் நிறுவனத்தின் யூத முதலாளி வாங்கினார்.
அந்த நாளிதழை வாங்கியபோது நியூ ஆர்லியன்ஸ் நகரில் விழா நடந்தது. அதில் உரையாற்றிய நியூஹவுஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறினார் :- “நான் பீகான் டைம்ஸை வாங்கியபோதே நியூ ஆர்லியன்ஸ் நகரையும் வாங்கிவிட்டேன்”!
இன்று நியூ ஹவுஸ் என்ற யூத நிறுவனம் 12 தேசங்கடந்த அதாவது கண்டங்களைக் கடந்த நாளிதழ்கள், 24 தொலைத் தொடர்பு நிறுவனங்கள், 26 தேசிய இதழ்கள், 78 நாளேடுகள் மற்றும் உலகெங்கும் எண்ணற்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் கூட்டு என்று தனது ஊடக ஆதிக்கத்தைப் பரப்பி வருகிறது.
பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் மிகப்பிரபலமும் செல்வாக்கும் படைத்த ’டைம்ஸ்’ நாளேட்டை ரூபர்ட் முர்டோக் கைப்பற்றிக் கொண்டார். மேலும் சண்டே டைம்ஸ், சன், நியூஸ்ஆஃப்த வேல்ட் போன்ற நாளேடுகளும் சிட்டி மேகசின் என்ற வார ஏடும் ரூபர்ட் மூர்டோக்குக்குச் சொந்தம்.
பலகோடி மக்களின் “அறியாமையைப் போக்கி அறிவொளி ஏற்றும்’’ நாற்றமெடுத்த ‘ப்ளேபாய்’ இதழும் யூதர்களுக்குச் சொந்தமானதே. 1855ஆம் ஆண்டில் யூதர்களால் தொடங்கப்பட்ட டெய்லி டெலிகிராப் நாளேடு யூதர்களின் ஆதிக்கத்தை இன்றும் பிரிட்டனில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸில்..
ஆஸ்திரேலியாவில் ரூபர்ட் முர்டோக் என்ற யூதர் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாளேடு மற்றும் வார ஏடுகளைச் சொந்தமாக வைத்திருக்கிறார். இவையனைத்தும் முன்னணி ஏடுகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவில் முன்னணி ஏடுகளையும் செய்தி நிறுவனங்களையும் யூதர்களே சொந்தமாகக் கொண்டுள்ளனர். போரிஸ் பெர்ஸோவ்ஸ்கி, கோசின்ஸ்கி ஆகிய இரு யூதர்களும் ரஷ்யாவிலுள்ள ஏராளமான ஊடகங்களின்  முதலாளிகளாக உள்ளனர். ரஷ்ய மொழியில் வெளிவருகிற மிகப் பிரபலமான நாளேடுகளான சேஃப் துன்யா, நோஸாஃபோஸீமாய, அஸ்ஃபசோதா ஆகிய நாளேடுகளும் ஈதோகீ, ஓஹூ நியூக் முதலான வார ஏடுகளும் மேற்படி இரு யூதர்களுக்கே சொந்தம்.
இவை தவிர ஏராளமான அச்சு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் இவர்கள் இருவருக்கும்  சொந்தமாக உள்ளன. பிரான்சில் ஷார்ல் ஹாப்ஸ் என்ற யூதர் 1935 ஆம் ஆண்டில் ஹாப்ஸ் செய்திகள் என்ற பெயரில் ஒரு செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் அச்செய்தி நிறுவனத்திலிருந்து ’பிரஞ்ச் பிரஸ்’ என்ற தினசரி வெளிவந்தது. இதுவும் இதுபோன்ற எண்ணற்ற பல ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் யூதர்களுக்குச் சொந்தமாக இன்று பிரான்சில் உள்ளன.
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மின்னணு ஊடகங்களிலும் ஆயிரக்கணக்கான அச்சு ஊடகங்களிலும் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதை முன் பக்கங்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். . எனினும் அந்தப் பக்கங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அடையாளம் காட்டியிருக்கிறோம். அதுவும் உலகளவில் மிகவும் பிரபலமடைந்த ஊடகங்களின் நிலையை மட்டுமே அடையாளம் காட்டி இருக்கிறோம் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு ஒரு நாடு இல்லாமல் – போக்கிடமில்லாமல் நாடோடிகளாக யூதர்கள் திரிந்து கொண்டிருந்த நிலையில், தங்களுக்காக ஒரு நாடு, ஏராளமான சொத்துக்கள், ஊடகங்களில் ஊடுருவல், மேலாதிக்கம் என்று சிந்தித்துக் களமிறங்கியதில் “ஏதோ ஒரு வகையில்” நியாயமிருக்கலாம்.
ஆனால் இன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாலஸ்தீன நிலப்பரப்பை அமெரிக்க, ஐரோப்பிய ஷைத்தானியப் பேரரசுகளின் துணையுடன் சர்வாதிகாரமாக ஆக்ரமித்துக் கொண்டு அதில் தங்களுக்கென ஒரு நாட்டையும் இராணுவத்தையும் உருவாக்கிக் கொண்டு பாலஸ்தீன முஸ்லிம்களை ஒடுக்கிப் படுகொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், ஊடகங்களில் இந்தளவுக்கு வெறித்தனமான ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருப்பது ஏன்? இதுதான் மிகவும் முக்கியமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய விசயம். அவர்கள் இன்றும்  இந்த அளவுக்கு ஊடகங்களில் வெறித்தனமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதற்கு முக்கியமான மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.
1. வர்த்தகச் சூதாட்டம். அதாவது இன்றைய உலகமயமாக்கல் சூழலில், உலக நாடுகளை நிதிச்சந்தைக் கட்டுப்படுத்தும் சூழலில், எந்த ஒரு நிறுவனமும் பங்குச்சந்தைக்குள் நுழைந்து கோடி கோடியாய்க் கொள்ளையடிக்கலாம் என்ற சூழலில், வளர்ந்த, தேசங்கடந்த ஊடகங்களின் மூலம் பங்குச் சந்தையில் கோடி கோடியாய் லாபமீட்டலாம் என்பதுடன் படிப்படியாக பங்குச் சந்தையையே கைப்பற்றி உலக நாடுகளை ஆட்டுவிக்கலாம். அத்துடன் பங்குகளை ஒரே நேரத்தில் உருவி பங்குச்சந்தையையும் அதைச்சார்ந்து நிற்கும் உங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் ஆட்டங்காணச் செய்வோம் என்று மிரட்டி பல காரியங்களை பல நாடுகளின் அதிபர்கள் மூலமே சாதித்துக் கொள்ளலாம். மேலும் ஊடகங்கள் கைவசம் இருப்பதால் மந்த நிலையில் இருக்கும் பங்குச் சந்தையைக் கூட சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஏற்றம் காணுகிறது. கொள்ளை லாபம் கொட்டப்போகிறது என்று புளுகி, சாதாரண, நடுத்தர முதலீட்டாளர்களை முதலீடு செய்ய  வைத்துக் கொள்ளையிடலாம். மொத்தத்தில் பலதேசங்களை மொட்டையடிக்கலாம். பலதேசங்களை மிரட்டலாம், ஆட்டுவிக்கலாம், காரியம் சாதிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் இன்று வளர்ந்த, முன்னணி அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் கொள்ளை லாபத்தில் தான் இயங்குகின்றன. விளம்பரம் மற்றும் அரசின் சலுகைகள் மூலம் கோடி கோடியாய் லாபமீட்டுகின்றன. பெருந்தொழில் அதிபர்களின் தரகர்களாகச் செயல்பட்டு டாலர்களில் குளிக்கின்றன. மேலும் தங்களது உற்பத்திப் பொருட்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களையும் ‘உன்னதமாகச்’ சித்தரித்து மக்கள் மூளையில் திணித்து அதன் மூலமும் பில்லியன் கணக்கில் அறுவடை செய்கின்றன.
2. கருத்தியல் பயங்கரவாதம். உண்மைகளை மறைப்பது, திரிப்பது, அவதூறுகளையும் பீதியையும் பரப்புவது. அதாவது கடந்த கால உண்மைகளை மறைத்து, மேற்குலக அரசுகள் நிகழ்த்திய / நிகழ்த்தி வருகிற வன்முறைகளை மறைத்து, அரசு வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களையும் உரிமைகளுக்கான போராட்டங்களையும் தீவிரவாதமாகச் சித்தரித்து உலகமக்கள் மூளையில் திணிப்பது., சுருங்கச் சொன்னால், அவர்கள் தீர்மானிக்கும் செய்திகளையே படிப்பதும், பேசுவதும், சிந்திப்பதுமாக உலக மக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவது.
இதை எளிமையாகக் கூற வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அதாவது இன்று உலக அளவில் வளர்ந்த முன்னணி ஊடகங்கள் எவற்றைச் செய்திகளாக வெளியிடுகின்றனவோ அவற்றைத்தான் நடுத்தர, சிற்றிதழ்களும் செய்திகளாக வெளியிடுகின்றன. அவற்றைத்தான் விவாதத்திற்கு உட்படுகின்றன. இந்த வட்டத்திற்கு அப்பாற்பட்டு இவர்களால் எதுவுமே செய்து விட முடியாது. ஒருவேளை வேறு ஒரு வட்டத்தை உருவாக்க முயற்சித்தால் அது காற்றில் கரைந்த முயற்சியாகவே அமையும். அந்த அளவுக்கு யூதர்கள் ஊடகப் பலம் பெற்றுள்ளனர். சுருங்கச் சொன்னால் யூதர்கள் தீர்மானித்திருக்கும் வட்டத்திற்குள்ளேதான் உலக மக்களின் சிந்தனை, படிப்பு, முயற்சி எல்லாம் இருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் உலகளாவிய கருத்தியல் பயங்கரவாதம்.
3. யூதர்களே கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம். அவர்களே இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய உரிமையுள்ளவர்கள் என்கிற கருத்தாக்கத்தை ஊடகங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாகப் பரப்புவது. இதை மேற்குலகில் பல ஊடங்களின் மூலம் பகிரங்கமா
கவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மேற்படி கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநாடுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் அமெரிக்கா, ஐரோப்பிய முன்னாள் / இன்னாள் அதிபர்கள், செயலர்கள் என்று பலரும் கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மொத்தத்தில் தங்களது பாஸிசக் கோட்பாட்டை தங்களின் செல்வாக்குமிகுந்த ஊடகங்களின் வழியாகப் பரப்பிவருகிறார்கள்.
குறிப்பாக முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் பல கருத்தாக்கங்களையும் இழிவாகவும் பயங்கரமாகவும் சித்தரித்துப் பரப்பி வருகிறார்கள். மேலும் நம் நாட்டில் உள்ள அச்சு ஊடகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் யூதர்களின் பங்கு ஏராளம் உள்ளன. யூதர்களோடு மிக நெருக்கமாக உறவு வைத்துள்ள ஆரிய சங்பரிவார் கூட்டம் அத்தகைய ஊடகங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லீம் வெறுப்பு என்ற அவர்களின் ஜீவநாதத்தை இடைவிடாது ஒலித்து வருகின்றனர்.
இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்து விழிப்புடன் செயலாற்ற வேண்டிய முஸ்லிம்களோ தாங்கள் ஒரே உம்மா என்கிற ஓருடல் என்பதையும் உலகுக்கு நேர்வழிகாட்ட வேண்டிய பொறுப்பை தங்களுக்கு அல்லாஹ் (சுபு) கடமையாகத் தந்திருக்கிறான் என்பதையும் மறந்து அந்நியச் சித்தாந்த நோய் பிடித்துத் திரிகிறார்கள். நோய் தீர பிரார்த்திப்பது மட்டுமல்ல, முயற்சிப்பதும் முக்கியம். முயற்சிப்போமா?
என்ன செய்வது?
உலக அளவிலும் இந்திய அளவிலும் வலிமையாக செய்யப்படுகின்ற திரிபுவாதத்திற்கு சரியான, முறையான பதிலடி கொடுக்க வேண்டும். உலக மக்களில் ஒன்ற¬க் கோடி யூதர்களால் செய்யப்படுகின்ற வேலைகளினால் 180 கோடி முஸ்லிம்கள் கடும் சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர்.
எதிர்கால இளம் தலைமுறைக்கு இந்த ஆபத்துக்களைச் சொல்லி எச்சரிக்கை செய்து வளர்க்க வேண்டும். அருட்கொடையாக, அமானிதமாக நம்மிடம் வழங்கப்பட்டுள்ள தீனுல் இஸ்லாம் மார்க்கத்தை உறுதியாகப் பற்றிப்
பிடிக்கும் சமுதாயமாக எதிர்கால முஸ்லிம் சமூகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
உலக வரலாறு, உலக நிகழ்வுகள் குறித்து தெளிவான ஞானம் மற்றும் இவற்றில் ஒரு முஸ்லிம்க்கு உள்ள பொறுப்புகள் குறித்த தெளிவான பார்வை ஆகியவை எல்லா முஸ்லிம்களிடமும் உருவாக வேண்டும்.
தலைமை தாங்குவோரிடத்தில் இஸ்லாமிய எதிரிகளுக்குக் களம் எது என்பதை தீர்க்கமாக அறிந்து, உணர்ந்து செயலாற்றும் ஆற்றல் வேண்டும். ஆபத்துகள் எது என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கு உணர்த்தி, அவற்றிலிருந்து மீண்டிட வழி என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
அடுத்த தலைமுறை எதிர்காலத்திற்கான தங்களது தொழில் துறைகளை தேர்வு செய்யும் போது எது எந்த துறையாக இருந்தாலும் அவர்கள் இதழியல் மற்றும் ஊடகம் அவற்றில் நுழைந்து முத்திரையைப் பதிக்கக்கூடிய ஆற்றலுடன் உருவாக்கப்பட வேண்டும்.
மக்களே, மார்க்கத்தில் பயிற்சி பெறுங்கள்!
உலகின் நிகழ்வுகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்!
உலகின் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை வாழ்ந்தும் வெளிப்படுத்தியும் காட்டுங்கள்!
வெற்றி இஸ்லாம் ஒன்றுக்கே!
- அலாவுத்தீன் இம்தாதி
———————————————————————————————————–
இணையதளங்களில் யூதர்களின் ஆதிக்கம்…
இவை தவிர myspace – basynet – wikipedia – woopidoo முதலானவையும் யூதர்களுக்குச் சொந்தமே.

உலகச் செய்தி நிறுவனங்களில் யூதர்களின் ஆதிக்கம்
யூதர்களுக்குச் சொந்தமாக உலகெங்கும் பல செய்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட யூதச் செய்தி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து முன்னணி நிறுவனங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களாகும். ஏனெனில் இந்நிறுவனங்கள் உலகெங்கும் பல கிளைகளை பல்வேறு பெயர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்நிறுவனங்களும் இவற்றின் பல்லாயிரக் கணக்கான கிளைகளும் ஏராளமான தலைப்புகளில் எண்ணற்ற நூல்கள், மாத, வார, நாளிதழ்கள் ஆகியவற்றை வெளியிடுகின்றன. மேலும் மின்னணு ஊடகங்களையும் நடத்தி வருகின்றன.
1.    டைம் பாக்ஸ் இது வார்னர் பிரதர்ஸ் என்ற சினிமா நிறுவனத்தின் பெரும் பங்குகளை வைத்திருப்பதுடன் உலகின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாகத் திகழ்கிறது. இதன் தலைமைப் பீடத்தில் ‘ஜெரால்டுலைபன்’ என்ற யூதர் கோலோச்சுகிறார்.
2. ராண்டம் – செய்தி நிறுவனம்
3.    ஷைமன் அண்ட் ஷோஸ்டர் – செய்தி நிறுவனம்
4.    ரிச்சர்டு பர்ன்ஸ்டைன் என்ற யூதரின் தலைமையிலான வெஸ்டர்ன் நிறுவனம்.
5.    ரூபர்ட்முர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் செய்தி நிறுவனம்.
உலகெங்கும் செல்வாக்குச் செலுத்தி வரும் ’ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனமும் யூதர்களால் உருவாக்கப்பட்டு யூதர்களால் நிருவகிக்கப்படுபவையே. இதன் தலைமையகம் பிரிட்டனில் இருக்கிறது.
சினிமாத்துறையில் யூதர்களின் ஆதிக்கம்
1.    ஹாலிவுட்டின் மிகப் பெரிய சினிமா நிறுவனங்களில் ஒன்றான பாரமவுண்ட் நிறுவனம் லூயிஸ் மேயர் என்ற யூதருக்குச் சொந்தம்.
2.    மெட்ரோ கோல்டன் என்ற நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பங்குகள் இரண்டு யூதர்களுக்குச் சொந்தம்.
3.    மிகப்பிரபலமான பாக்ஸ் நிறுவனம் வில்லியம் பாக்ஸ் என்ற யூதருக்குச் சொந்தம்.
4.    வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வார்னர் என்ற யூதரால் உருவாக்கப்பட்டு இன்று அவரது சகோதரிக்குச் சொந்தமாக இருக்கிறது.
5.    யுனிவர்சல் என்ற நிறுவனம் கார்ல் லைமீ என்ற யூதருக்குச் சொந்தம்.
இதுபோலவே பிரிட்டனில் 280க்கும் மேற்பட்ட மிகப்பெரிய சினிமா நிறுவனங்களை யூதர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களில்…
யூதர்கள் உலகெங்கும் ஏராளமான தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருக்கின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்றால் டெலிபோன், செல்போன் நிறுவனங்கள் என்று பலர் சுருக்கமாகப் புரிந்து கொள்கின்றனர். ஆனால் யூதர்கள் கைவசம் வைத்திருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்பது டெலிபோன், செல்போன், இணையம், வானொலி, தொலைக்காட்சி என்று பல ஊடகங்களை அதுவும் ஆயிரக்கணக்கில் இயக்கும் வசதிகளை உள்ளடக்கியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெலைத் தொடர்பு நிறுவனங்கள் பலவற்றை யூதர்கள் உலகெங்கும் சொந்தமாக வைத்திருக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் முப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கின்றனர். இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளை இயக்கிக் கொண்டிருக்கின்றன.
1. ABC மற்றும் NBC குழுமம்  2. MTV குழுமம்  3. பாக்ஸ் குழுமம்
இவையல்லாமல் நியூ ஹவுஸ் நிறுவனம் மட்டும் 24 தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கிறது. அந்நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் உலகெங்கும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறது.
பிரிட்டனில் ATV குழுமம் என்கிற யூத தொலைத்தொடர்பு நிறுவனம் ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் கோசின்ஸ்கி என்ற யூதர் NTV குழுமம் என்ற பெயரில் பல தொலைக்காட்சிகளை நடத்தி வருகிறார். இதுபோலவே பிரேசில், உருகுவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பொலிவியா ஜெர்மனி, இத்தாலிய போன்ற தேசங்களில் யூதர்களே 90 விழுக்காடு ஊடகங்களில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறார்கள்

Thanks (http://www.samooganeethi.org/)
Share

Thursday, February 3, 2011

ஆறுகள் ஓடுமா அரேபியாவில்?




அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும், ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது. (நூல்: முஸ்லிம்)

Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.
''அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?'' . எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது- ''ஆம் பனியுகத்தில் அவ்வாறு இருந்தது''.
அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:''எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா.?''
ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-
''ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!''
ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது: ''எப்படி சொல்கிறீர்கள்?''
''புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை''
''இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அறிவித்து விட்டதை அறிவீர்களாஸ?
ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:
அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும், ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது. (நூல்: முஸ்லிம்) இப்போது சொல்லுங்கள்: ''நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?
பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: ''ரோமானியர்களாக இருக்கலாம்''
''நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் எப்படி கூற முடிந்தது.?''
உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:
''அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.''
மேலும் அவர் சொன்னவை:
''ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.
அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.''
Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்த பார்வையினால் கிடைத்த நிஜம் இது.
''நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?'' (அல் குர்-ஆன்: 41:53)

Share

எகிப்து புரட்சி - அமெரிக்கா - இஸ்ரேல் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

  
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

எகிப்து - உலக நாடுகள் அனைத்தின் பார்வையும் இன்று இந்த நாட்டின் மீது தான் திரும்பியுள்ளது. சீனா தொடங்கி அமெரிக்கா வரை பல அரசாங்கங்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது எகிப்தில் நடக்கும் மக்கள் போராட்டம். 

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில்,
  • எதனால் இந்த புரட்சி? 
  • புரட்சி எப்படி தொடங்கியது?
  • இதன் பின்னணியில் யார் இருப்பதாக அரசு குற்றஞ்சாட்டியிருக்கின்றது?
  • மக்கள் போராட்டத்தின் போது நடந்த சம்பவங்கள்.
  • எகிப்து அதிபர் பதவி விலகினால் அடுத்து என்ன நடக்கும்?
  • எதுமாதிரியான ஆட்சி அடுத்து அமையலாம்?
  • இந்த புரட்சி குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகம் கவலைப்படுவதற்கு என்ன காரணம்?     
என்று இந்த புரட்சி குறித்து விரிவாக பார்க்கவிருக்கின்றோம்.


எதற்காக இந்த புரட்சி? 

இது நம்மில் பெரும்பாலானோர் அறிந்த விசயம்தான்.

வறுமை, வேலையில்லா திண்டாட்டம், அரசாங்கத்தில் ஊழல் மலிந்து கிடப்பது என்று இவை அனைத்திற்கும் எதிரான போராட்டம் தான் இந்த புரட்சி. எகிப்து மக்களை பொறுத்தவரை இவையெல்லாம் முடிவுக்கு வர வேண்டுமென்றால் தற்போதைய அதிபர் முபாரக் பதவி விலகி புதிய அரசு மக்களால் தேர்ந்தெடுக்க படவேண்டும். 

(மேலே பார்த்த காரணங்கள் மட்டுமல்லாமல், அதிபர் முபாரக் தன் மகனை அடுத்த அதிபராக்க முயன்றதும் ஒரு காரணம்)
கடந்த முப்பது ஆண்டுகளாக எகிப்தை ஆண்டு வரும் முபாரக் பதவி விலக சம்மதிக்கவில்லை. தற்போதைய அமைச்சரவையை கலைத்து விட்ட முபாரக், புதிய துணை அதிபரையும், பிரதமரையும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சீர்திருத்தமும் நடக்கும் என்று அறிவித்துள்ளார். 

ஆனால் அதிபரின் இந்த நடவடிக்கைகள் எகிப்து மக்களிடையே எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் கூடுதலாகவே போராட்டம் வலுவடைந்து வருகின்றது. முபாரக் பதவி விலகல் மட்டுமே அவர்கள் எதிர்ப்பார்ப்பது. அதற்கு குறைந்து எதையும் ஏற்க அவர்கள் தயாரில்லை. 


எப்படி தொடங்கியது போராட்டம்?

துனிசிய புரட்சி புத்துணர்ச்சியை கொடுக்க, சமூக தளங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் ஆரம்பித்த அரசுக்கு எதிரான பிரச்சாரம் நாளடைவில் வலுவடைந்து, அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வீரியம் கொண்டு எழ, கடந்த மாதம் 25 ஆம் தேதி, எகிப்து தலைநகர் கெய்ரோவின் வீதிகளில் இறங்கி போராட துவங்கினர் மக்கள்.      

ஆளும் தேசிய ஜனநாயக கட்சியின் அலுவலகங்களை நோக்கி பேரணி சென்ற மக்கள், நாட்டின் தேசிய தொலைக்காட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட தொடங்கினர். கெய்ரோவின் முக்கிய சந்திப்பான தஹ்ரிர் சதுக்கத்தில் அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர். சில மணி நேர அமைதிக்கு பிறகு, போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட, கண்ணீர் புகை குண்டுகளை உபயோகப்படுத்த துவங்கியது காவல் துறை. 


நாட்டின் தலைநகரில் தொடங்கிய போராட்டம் பின்பு மற்ற நகரங்களுக்கும் வேகமாக பரவ தொடங்கியது. அலெக்ஸ்சான்ட்ரியா, மன்சூரா, அஸ்வான் என பல நகரங்களுக்கும் பரவிய போராட்டம் எகிப்து அரசை திக்குமுக்காட வைத்தது. 

புரட்சிக்கு பின்னணியில் யார் இருக்கின்றார்கள்?

நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கிய சில மணி நேரங்களில், இதற்கெல்லாம் காரணம்"முஸ்லிம் சகோதரத்துவ" கட்சிதான் (Muslim Brotherhood) என்று குற்றஞ்சாட்டியது அரசு.  

யார் இந்த முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர்?

எகிப்து அரசியலை உற்று நோக்கி கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சத்தை இந்த கட்சி தான் உருவாக்கியிருக்கின்றது. முபாரக் வீழ்ந்து இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால்? 

எகிப்திற்கான முன்னாள் இஸ்ரேலிய தூதர் எலி ஷேக்டு (Eli Shaked) சில தினங்களுக்கு முன் எகிப்து புரட்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், எகிப்தில் தேர்தல் நடந்தால், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
  
எகிப்தின் முக்கிய எதிர்க்கட்சியான இவர்களைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம். 

1928 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்சியின் குறிக்கோள், எகிப்தில் ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர வேண்டுமென்பதே ஆகும். வரலாற்றில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்துள்ள இந்த அமைப்பு அரசியல் ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது, இவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், மதம் சார்ந்த ஒரு இயக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .  

மக்களிடையே குறிப்பிடத்தக்க ஆதரவை இந்த கட்சி பெற காரணம், இவர்களின் சமுதாய பணிகள் தான். 2005 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்த கட்சி போட்டியிட தடை இருந்தாலும், இதன் உறுப்பினர்கள் சுயேட்சையாக நின்று 20% இடங்களை கைப்பற்றினார்கள்(இவ்வளவுக்கும் அந்த தேர்தலில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்தது).

பிறகு ஒரு ஆவணத்தை வெளியிட்டு தன்னுடைய செல்வாக்கை பெருமளவு இழந்தது இந்த அமைப்பு. அதாவது, 2007 ஆம் ஆண்டு, தங்களின் அரசியல் நிலைபாடு குறித்து இவர்கள் வெளியிட்ட ஆவணத்தில், அதிபராக ஒரு பெண்ணையோ அல்லது கிருத்துவரையோ அனுமதிக்க போவதில்லை என்ற தெரிவித்திருந்தனர். எகிப்து மக்கள் பெருமளவில் இந்த கருத்தை எதிர்த்தனர்.

கிருத்துவர்கள் மீது இந்த அமைப்பினருக்கு எந்தவொரு பாரபட்சமும் இல்லை. இதனை நீண்ட காலமாக இவர்கள் தெளிவுபடுத்தி தான் வந்திருக்கின்றனர். ஆனால் ஒரு கிருத்துவரை அதிபராக்க முடியாது என்பது அவர்களது அரசியல் நிலைபாடாக இருந்தது. எதிர்ப்பு அதிகளவில் கிளம்ப, தங்களின் இந்த ஆவணம் ஒரு முன்னோட்டம் மட்டுமே ஒழிய இறுதி முடிவு கிடையாது என்று கூறி தன்னுடைய கருத்தை திரும்ப பெற்று கொண்டது இந்த அமைப்பு.

வரலாற்றை நாம் கூர்ந்து கவனித்தால் ஒன்றை புரிந்து கொள்ளலாம். அதாவது, எகிப்தில் நடந்த அரசியல் பிரச்சனைகளுக்கு பின்னணியில் இவர்கள் இருந்திருக்கின்றார்கள். அதனாலேயே வரலாறு முழுக்க இந்த கட்சியினர் எகிப்திய அரசாங்கத்தால் அதிக அளவில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அரசுக்கு எதிராக ஒரு பிரச்சனை நாட்டில் எழுகின்றது என்றால், அரசாங்கத்தின் சந்தேக கண்கள் முதலில் விழுவது இவர்கள் மேலாகத்தான் இருக்கும்.

அந்த காரணத்தினாலேயே தற்போதைய புரட்சிக்கும் இந்த இயக்கத்தினர்தான் தான் காரணம் என்று அரசு குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டில் உண்மையிருக்கின்றதா? 

இல்லையென்று மறுக்கின்றனர் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர். இந்த புரட்சிக்கு முதலில் விதை போட்டவர்கள் சமூக ஆர்வலர்கள் என்றும், பின்னர் தான் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கின்றன ஊடகங்கள்.    

போராட்டத்தில் தாமதமாக குதித்தனர் என்றாலும், இவர்கள் மக்களுடன் அணி சேர்ந்த பிறகு போராட்டம் மிக வலிமையானதாக மாற தொடங்கியது. சில நாட்களில் இவர்களே பெரும்பாமையினராக இருக்கக்கூடிய அளவு போராட்டம் மாறியது.



அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் வீடு வீடாக சென்று மக்களை அழைத்து அடுத்த நாளும் போராட்டத்தின் வீரியம் குறையாமல் பார்த்து கொண்டனர்.

இவர்கள் ஆதரவால் மிகப்பெரிய அளவில் பல நகரங்களிலும் மக்கள் பேரணி நடத்த ஆரம்பித்தனர். இந்த இயக்கத்தின் தலைவர்கள் தொடர்ச்சியாக கைதானார்கள்.

ஜனவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஜூம்மா தொழுகைக்கு பிறகு போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. போராட்டகாரர்களுக்கும், போலிசாருக்கும் இடையே நடைப்பெற்ற சண்டையில் இதுவரை சுமார் 125 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

புரட்சி கால நிலவரம்:

கெய்ரோ நகரின் முக்கிய சந்திப்பான தஹ்ரிர் சதுக்கம் வரலாற்று முக்கியத்துவத்தை பெற ஆரம்பித்திருக்கின்றது. அங்கேயே தொழுகின்றனர், போராடுகின்றனர்.   



அதிபர் முபாரக் பதவி விலகும்வரை இந்த சதுக்கத்தை விட்டு விலகப்போவதில்லை என்று அறிவித்திருக்கின்றனர் போராட்டகாரர்கள்.

அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவர் முஹம்மது அல்-பரேடி கடந்த 27 ஆம் தேதி எகிப்து திரும்பி போராட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டார்.

போராட்டம் தொடங்கிய சில நாட்களுக்கு பிறகு போலீசார் பலரை காணவில்லை. அவர்களும் போராட்டத்தில்  குதித்திருக்கலாம் என்று அல்ஜசீரா ஊடகம் தெரிவிக்கின்றது.

சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இருப்பதால், திருட்டு சம்பவங்களை தடுக்க, எகிப்து மக்கள் தங்களுக்குள்ளாக அணிகளை உருவாக்கி வீடுகள், ஓட்டல்கள், அங்காடிகள், அருங்காட்சியகங்கள் என பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாத்து வருகின்றனர். இதற்கு அனைத்து கட்சியினரும் உதவி புரிகின்றனர்.

இராணுவத்தினர் மக்களுடன் ஒத்துழைப்பதாக செய்திகள் வருகின்றன. தற்போது பணிக்கு திரும்பியுள்ள போலிசாரின் நடவடிக்கை எப்படி இருக்குமென்று தெரியவில்லை.

மக்களின் போராட்டம் சட்டத்திற்கு உட்பட்டது தான் என்றும், தங்கள் எண்ணங்களை அமைதியான முறையில் வெளிப்படுத்த மக்களுக்கு உரிமை உண்டென்றும், மக்களை நோக்கி எவ்விதமான தாக்குதலையும் நிகழ்த்த மாட்டோமென்றும் எகிப்து இராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது. மேலும், மக்களை காப்பதே இராணுவத்தின் முதல் பொறுப்பு என்றும் கூறியுள்ளது. இராணுவத்தின் ஆதரவும் மக்கள் பக்கம் இருப்பதால் முபாரக் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சுமார் 125 பேர் இந்த புரட்சியின் போது இறந்திருப்பதாக கூறப்பட்டாலும், தற்போதைய நிலைமை சுமூகமாகவே இருக்கின்றது. ராணுவத்தினர், காவல் துறையினர் மற்றும் மக்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி கொள்ளும் காட்சிகளும் நடந்தேறுகின்றன.



இந்த புரட்சி குறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிக அளவில் கவலைப்பட என்ன காரணம்?

அமெரிக்காவை பொறுத்தவரை, மற்றொரு ஈரானாக எகிப்து ஆகிவிடக்கூடாது என்ற பயம். ஏனென்றால், 1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சி பல பாடங்களை அமெரிக்காவிற்கு புகட்டியுள்ளது. அதாவது, புரட்சிக்கு முன்பு இருந்த ஈரானிய அரசாங்கம் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டியது. ஆனால் புரட்சிக்கு பின்னரான அரசாங்கம் இன்று வரை அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகின்றது.

அன்று அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்ட்டர். புரட்சிக்கு பின்பான அரசாங்கமும் தனக்கு ஆதரவாக இருக்குமென்று கார்ட்டர் எண்ணியிருக்க வேண்டும். ஆனால் இறைவன் நாடியதோ வேறொன்றை. அன்று கார்ட்டருக்கு ஏற்பட்ட நிலைமை இன்று ஒபாமாவுக்கு ஏற்பட்டிட கூடாதென்பதே அமெரிக்காவின் அச்சம். ஏனென்றால் தற்போதைய அதிபர் முபாரக் அமெரிக்க ஆதரவாளர்.

அதனாலேயே, உலகம் முழுவதும் முபாரக் பதவி விலக வேண்டுமென்று குரல்கள் ஒலித்து கொண்டிருக்க, அமெரிக்க அரசாங்கமோ, முபாரக் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று கூறி கொண்டிருந்தது.

இஸ்ரேல் நிலைமையோ இன்னும் சற்று ஆழமாக கவனிக்கப்பட வேண்டியது. இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாஹு வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்,  ஈரானைப் போல எகிப்தும் ஆகலாம் என்று.

அமெரிக்காவை விட இஸ்ரேல் அதிகமாக கவலைப்பட காரணம் தற்போதைய பிரச்சனையால் தன்னுடைய பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று நினைப்பதால் தான். கடந்த முப்பது ஆண்டுகளாக இஸ்ரேலும், எகிப்தும் நட்பு பாராட்டி வருகின்றன (இதனை முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் கடுமையாக எதிர்த்து வந்திருக்கின்றனர்)

எகிப்தினுடனான நட்பு காலங்களில் பொருளாதாரத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது இஸ்ரேல். தன்னுடைய எல்லைக்கோட்டை எகிப்துடன் பகிர்ந்து கொண்டிருக்கும் இஸ்ரேல், இந்த அமைதி காலங்களில் பெருமளவு செல்வத்தை ராணுவத்துக்கு செலவழிக்காமல் நாட்டின் வளர்ச்சிக்கு செலவழித்திருக்கின்றது.

எகிப்துடனான போர்க்காலங்களில் சுமார் 23% வருவாயை ராணுவத்துக்கு செலவழித்த இஸ்ரேல், எகிப்துடனான அமைதிக்கு பிறகு 9% மட்டுமே தன் ராணுவத்துக்கு செலவிடுகின்றது. அதுபோல, எகிப்தினுடனான பகை காலத்தில் ஆயிரக்கணக்கில் தன் படைகளை நிறுத்தி வைத்திருந்த இஸ்ரேல், இப்போது சில நூறுகளில் மட்டுமே வீரர்களை நிறுத்தி வைத்திருக்கின்றது.

ஆக, எகிப்து என்னும் பெரிய நாடு அவர்களுடன் நட்புடன் இருப்பது என்றுமே அவர்களுக்கு நல்லது. இதற்கு இந்த புரட்சி மூலம் பங்கம் வந்து விடுமோ என்று தான் அஞ்சுகின்றது இஸ்ரேல். அவர்களுடைய சமீபத்திய அறிக்கைகள் அவர்களது கவலையை நன்றாகவே பிரதிபலிக்கின்றன.

ஆட்சி மாறுவது அவர்களுக்கு பிரச்சனையில்லை. எதுமாதிரியான புதிய அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தடுக்க போகின்றார்கள் என்பதுதான் இப்போது அவர்கள் முன்னால் இருக்கும் மிகப்பெரிய கவலை. முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது அவர்களது தற்போதைய எண்ணமாக இருந்தாலும் இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

புரட்சிக்கு பின் என்ன நடக்கும்?

அதிபர் முபாரக் முன்மொழிந்திருக்கும் எந்தவொரு சீர்த்திருத்த நடவடிக்கையையும் ஏற்றுகொள்ள தற்போதைய நிலையில் மக்கள் தயாரில்லை. அதனாலேயே இன்னும் மிகப்பெரிய போராட்டத்தை நேற்று நடத்தி காட்டினர் மக்கள்.  மொத்ததில், முபாரக் பதவி விலகுவது மட்டுமே தீர்வாக அமையும்.



அப்படி ஒருவேளை அதிபர் முபாரக் பதவி விலகினால், இடைக்கால அரசு அமையலாம். அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவர் முஹம்மது அல்-பரேடி அதிபராக பொறுப்பேற்கலாம்.

பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படலாம்.

எதுமாதிரியான அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுப்பர்?

எகிப்தின் மக்கள் தொகையில் சுமார் 10% கிருத்துவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் (95%) காப்டிக் கிருத்துவர்கள் (இவர்கள் கிருத்துமஸ்சை ஜனவரி 7 ஆம் தேதி கொண்டாடும் பழக்கத்தை கொண்டவர்கள். காப்டிக் என்றால் "எகிப்திய" என்று அர்த்தம் வரும்). காலங்காலமாக எகிப்தில் வசித்து வருபவர்கள். இன்றைய எகிப்து முஸ்லிம்களின் முன்னோர்கள் காப்டிக் கிருத்துவர்களாக இருந்தவர்கள் தான்.

தங்கள் நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டிருப்பவர்கள் எகிப்து கிருத்துவர்கள்.

கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே உள்ள நட்பும் நெகிழ்ச்சி தரக்கூடியது. கிருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் அவ்வப்போது நடந்தாலும் எகிப்தியர்கள் ஒற்றுமையுடனே இருக்கின்றார்கள். உதாரணத்துக்கு, சமீபத்தில் ஒரு சர்ச்சில் நடந்த கோர குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு (இரண்டு பாதிரியார்களின் மனைவிகள் இஸ்லாத்தை தழுவியதால் கிருத்துவ மடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விடுவிக்கப்படாதவரை கிருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது) பிறகு, தேவாலயங்களில் நடந்த பிரார்த்தனை கூட்டங்களுக்கு மனித சங்கிலி அமைத்து கிருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் முஸ்லிம்கள்.

ஆக, கிருத்தவர்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட எந்தவொரு கட்சியையும் ஆட்சியில் உட்கார வைக்க மாட்டார்கள் எகிப்து மக்கள். அதுமட்டுமல்லாமல், இப்போது நடப்பது மக்கள் புரட்சி. இதில் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் என்று அனைவரும் ஒற்றுமையுடன் பங்கேற்று கொண்டிருக்கின்றனர்.

மொத்தத்தில், கிருத்துவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்சிக்கே மக்களின் ஒட்டு விழும்.

எகிப்து பிரச்சனையின் முழு சாராம்சமும் இவைதான். தற்போதைய சூழ்நிலையில், எகிப்து மக்களின் போராட்டத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழிதான் உள்ளது. அதிபர் முபாரக்கின் பதவி விலகல் தான் அது.

(இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரம், அதிபர் முபாரக் தனது பதவி காலம் முடியும் வரை(செப்டம்பர், 2011) பதவியில் நீடிக்க போவதாக குறிப்பிட்டுள்ளார். மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டுமென்றும் போராட்டகாரர்கள் தெரிவித்து உள்ளனர்)

இன்ஷா அல்லாஹ், துவா செய்வோம்.....

  • எகிப்து மக்களின் இந்த ஒற்றுமை நிலைக்க வேண்டுமேன்று...
  • எகிப்து மக்கள் எதிர்ப்பார்க்ககூடிய நல்லாட்சி அமைய வேண்டுமென்று...
  • பொருளாதாரத்தில் எகிப்து சிறந்து விளங்கி வறுமைகள் ஒழியவேண்டுமென்று...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

My sincere thanks to:
1. Aljazeera.
2. BBC.
3. Reuters
4. Ottawa Citizen
5. AFP

References:
1. As it happened: Egypt unrest day five - BBC, 29th January 2011. link
2. Timeline: Egypt unrest - Aljazeera, 28th Jan 2011. link
3. Mubarak names deputy, protesters defy curfew - Times of India, 30th January 2011. link
4. China restricts news, discussion of Egypt unrest - Yahoo news, 31st January 2011. link
5. Brotherhood shows strength, limits in Egypt chaos - Associated Press. link
6. Muslim Brotherhood, Egypt Opposition Party, In The Spotlight During Protests - The Huffington Post, 30th January 2011. link
7. Al Jazeera undeterred by Egypt curb - Aljazeera, 30th January 2011. link
8. History of the Muslim Brotherhood in Egypt - Wikipedia. link
9. Threat of Muslim Brotherhood in Egypt likely overblown - Examiner, 29th January 2011. link
10. Muslim Brotherhood (Egypt) - The New York Times, updated on 31 January 2011. link
11. Israel 'fears' post-Mubarak era - Aljazeera, 31st January 2011. link
12. Giant protest to kick off in Egypt - Aljazeera, 1st February 2011. link
13. What is Coptic Christianity, and what do Coptic Christians believe? - Got questions.org. link
14. Muslim Brotherhhood, Egypt - LookLex Encyclopedia. link
15. Millions of protesters rock Egypt to oust Mubarak - Al-Arabiya, 1st February 2011. link
16. Over 200,000 in Egypt square call on Mubarak to go - MSN news, 1st February 2011. link
17. Muslims protect churches - National Post, 8th January 2011. link
18. Egypt's Copts clash with police - Aljazeera, 2nd January 2011. link
19. Muslim Brotherhood Falters as Egypt Outflanks Islamists - The Wall Street Journal, 15th May 2009. link
20. Muslim Brotherwood - Wikipedia
21. Defiant Mubarak vows to finish term -  Aljazeera, 2nd February, 2011. link