Monday, January 31, 2011

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்


உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி

இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்

நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்

குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.

4. உறுதியாக இருத்தல்

பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.

அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.

உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.

தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்

குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.

அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்

தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.

8. மன்னித்து விடுங்கள்

குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.

9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்

நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.

10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்

சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.

இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.

அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.

இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்

உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.

இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

12. கீழ்ப்படிதல்

பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!

தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!

முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.

இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.

மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

நன்றி : தமிழ் இஸ்லாம்  

Learn to Read Quran Online


விக்கிலீக்ஸ் - தீவிரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் மையங்களா இந்திய மதரசாக்கள்?


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.  

"the vast majority (of Indian muslims) remain committed to the Indian state" --- INDIA'S DEMOCRACY AND ECONOMY MINIMIZE EXTREMIST, 2(c), wikileaks cablegate.

உலகை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் விக்கிலீக்ஸ் மூலமாக கசிந்த, இந்திய முஸ்லிம்கள் குறித்த ஆவணத்தில் இருக்கும் ஒரு கருத்தை தான் நீங்கள் மேலே பார்த்தீர்கள். 

இந்தியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டின் (David C.Mulford) கருத்துக்களை கொண்ட அந்த ஆவணத்தில் இருந்து சில தகவல்களை சற்று விரிவாக இங்கு பார்ப்போம். அந்த ஆவணத்தை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும்.

------------------------------
Friday, 02 December 2005, 12:54
C O N F I D E N T I A L SECTION 01 OF 06 NEW DELHI 009127
SUBJECT: INDIA'S DEMOCRACY AND ECONOMY MINIMIZE EXTREMIST
RECRUITMENT OF JUVENILES (C-CT5-00623)
REF: STATE 211901
NEW DELHI 00009127 001.2 OF 006

இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று மற்றும் பயங்கரவாத ஆதரவின்மை:
2.(C). 1991ஆம் ஆண்டு இந்திய சென்சஸ் படி, முஸ்லிம்களின் மக்கள் தொகை பதினைந்து சதவிதத்திற்கும் சற்று குறைவாக உள்ளது. 1981-2001 இடையேயான காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 33% உயர்ந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் இந்திய மக்கள் தொகை 24% உயர்ந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய மைனாரிட்டி மார்க்கமாக இஸ்லாம் உள்ளது.

இந்தியாவின் பல நகரங்கள் மற்றும் மாநகரங்களில், குறிப்பாக வட இந்தியாவில், மூன்றில் ஒரு பங்கோ அல்லது அதனை விட மேலாகவோ முஸ்லிம்கள் வசிக்கின்றனர். பீகார் (12 மில்லியன்), மேற்கு வங்கம் (16 மில்லியன்), உத்தரபிரதேசம் (24 மில்லியன்) போன்றவை முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய மாநிலங்கள். முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் (92%) சன்னிகள், ஏனையோர் ஷியாக்கள்.

இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 150 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது (இந்தோனேசியாவிற்கு அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடு இந்தியா). மற்ற எந்த இந்திய குழுக்களையும் விட அதிக வறுமையில் வாடுபவர்களும் முஸ்லிம்கள் தான்.

சமயங்களில், பாரபட்சத்திற்கும் பாகுபாட்டிற்கும் (Discrimination and Prejudice) இலக்காகின்றனர் இந்திய முஸ்லிம்கள். இருந்தபோதிலும், அறுதிப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தியாவின் மீது தொடர்ந்து பற்று கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், அரசியலிலும் பொருளாதாரத்திலும் பங்கேற்க முயல்கினறனர்.

குறைந்த அளவிலான முஸ்லிம் இளைஞர்கள் மட்டுமே,  இந்திய அரசியல் தங்களது துயரங்களுக்கு பதில் சொல்லாது என்றெண்ணி Pan-Islamic (உலக முஸ்லிம்களை ஒரே இஸ்லாமிய நாட்டின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற கொள்கையை உடைய இயக்கங்கள்)மற்றும் பாகிஸ்தான் ஆதரவு இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். இந்த இயக்கங்கள் சில நேரங்களில் வன்முறைகளிலும் ஈடுபடுகின்றன.

இந்தியாவின் வலிமையான ஜனநாயகம், கலாச்சாரம் மற்றும் வளரும் பொருளாதாரம் போன்றவை முஸ்லிம் இளைஞர்களை இயல்பான வாழ்க்கையோடு ஒன்ற வைத்துள்ளது. இது, பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்ப்பதையும், அந்த இயக்கங்கள் செயல்படுவதையும் பெருமளவு குறைத்திருக்கின்றது.

3.(C). மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த இஸ்லாமிய அமைப்புகள் நிறைய இருந்தாலும், பெரும்பாலான முஸ்லிம்கள் மதச்சார்பற்ற அமைப்புகளிலேயே சேர்கின்றனர், ஆதரவளிக்கின்றனர். 

பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம் உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், பொதுவாக, முஸ்லிம்கள் மதச்சார்பற்ற கட்சிகளில் சேர்வது, அரசியல் சக்தியாக பா.ஜ.க உருவாகுவதை தடுக்கத்தான். 

இந்திய நாட்டிற்கு எதிராகவும், முஸ்லிமல்லாத இந்திய மக்களுக்கு எதிராகவும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மிக குறைவே. காஷ்மீருக்கு வெளியே இந்த இயக்கங்களுக்கு செல்வாக்கோ, புகழோ இல்லை. 

7.(C). பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களின் ஆதரவை பிரிவினைவாதமோ, தீவிரவாதமோ பெற்றதில்லை. பெரும்பான்மையான முஸ்லிம்கள் மிதவாத போக்கை கடைபிடிக்கின்றனர். 

பழமைவாத சன்னி அரசியல் இயக்கங்களான ஜமாத் இஸ்லாமி மற்றும் தியோபந்தி பிரிவு போன்றவை இஸ்லாமிய குறுகியவாதத்தை ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் சிலர் ஒசாமா பின் லேடனை admire செய்து தங்கள்  கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இந்த அமைப்புகளின் தலைவர்கள் இது போன்ற தங்கள் பார்வைகளை பொதுவில் வெளிப்படுத்துவதில்லை. அதுபோல, பேச்சு  அளவில் தான் இவர்களின் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு இருக்கின்றதே தவிர, அதை தவிர்த்து  வேறுவிதமான ஆதரவை இவர்கள் பயங்கரவாதிகளுக்கு அளிப்பதாக தெரியவில்லை.  

அப்பாவி முஸ்லிம்கள் மீதான இந்து பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அவ்வப்போது நடக்கும் மதக்கலவரங்கள் போன்றவை, சிறிய அளவிலான முஸ்லிம்களை வன்முறை என்னும் கோட்டையும் தாண்டி தீவிரவாதத்தின் பக்கம் அழைத்து சென்றிருக்கின்றன.

இந்திய மதரசாக்கள்: 

13.(C). இந்திய மதரசாக்கள், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஆள் சேர்க்கும் இடங்களாகவும், அவைகளில் பல பாகிஸ்தானின் ISI-இன்  பொருளுதவியோடு நடப்பதாகவும் இந்திய ஊடகங்கள் வண்ணமயமான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. எனினும், இது போன்ற செய்திகள் மேலோட்டமான பார்வையை கொண்டவை. தீவிரவாத குழுக்களுக்கு ஆள் சேர்க்கும் இடங்களாக இந்திய மதரசாக்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.

வட இந்திய சிறுவர் சிறுமியருக்கான தொடக்க நிலை மதரசாக்களை தொடர்ச்சியாக நிறுவி வருகின்றது தியோபந்தி பிரிவு. மதரசா கல்வியை ஐந்து வயது முதல் பல்கலைகழகம் வரை கொடுப்பதே அவர்களுடைய குறிக்கோள். அவர்களின் இந்த செயல்திட்டம், சிறுவர்களை, இயல்பான வாழ்கையிலிருந்து தனிமைப்படுத்தவோ, பயங்கரவாதத்தை நோக்கியோ அல்லது பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் குழுக்களுக்கு எளிதான இலக்காகி விடுமோ என்பது போன்ற கவலையை சற்று தருகின்றது.        
------------------------------

இந்தியாவில் பயங்கரவாதம் பல வகைகளில் இருக்கிறதென்றும் (இந்து, இஸ்லாமிய மற்றும் சீக்கிய), அவர்கள் அனைவரும் சிறுவர்களை தங்கள் இயக்கங்களில் சேர்த்தாலும், இந்த ஆவணத்தில் நாம் பார்க்கபோவது இஸ்லாமிய பயங்கரவாதம் சிறுவர்களை தங்கள் இயக்கங்களில் சேர்ப்பது பற்றிதான் என்று கூறி தொடங்கும் அந்த நீண்ட ஆவணம், 

  • காஷ்மீர், 
  • சிறுவர்களை பயங்கரவாதத்திற்கு சேர்ப்பது, 
  • பயங்கரவாத எண்ணங்களை கொண்ட அமைப்புகளின் பட்டியல்,
  • எதனால் சிலர் தீவிரவாத குழுக்களில் சேர்கின்றனர்?, 
  • தங்கள் நடவடிக்கைகளுக்கு அவர்கள் கூறும் காரணங்கள்,
  • முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், 
 என்று பலவற்றை அலசுகின்றது.

முழுமையாக அந்த ஆவணத்தை படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சுட்டவும். 

விக்கிலீக்ஸ்சை விடுவோம்.....

எங்கள் நாட்டுப்பற்றை சந்தேகிக்கும் அந்த மிகச் சில சகோதரர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது...

நாங்கள் முஸ்லிம்கள்...நாங்கள் இந்தியர்கள்...

அன்றும் சரி, இன்றும் சரி, (இன்ஷா அல்லாஹ்) என்றும் சரி, தொடர்ந்து எங்கள் பங்களிப்பை எங்கள் நாட்டிற்கு செய்து கொண்டிருப்போம். நீங்கள் கூப்பாடு போட்டு கொண்டே இருங்கள். உங்களை திருப்திபடுத்துவது எங்கள் வேலையில்லை. நல்ல செயல்களை செய்து இறைவனை திருப்திபடுத்துவதே எங்கள் வேலை. இறைவன் எங்கள் உள்ளங்களை நன்கு அறிவான்.

இந்த நாட்டின் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க இறைவன் உதவி புரிவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.      


One can read the entire document from here

My sincere thanks to:
1. ibnlive.com 

References:
1. WikiLeaks Cablegate: Indian Muslim population largely unattracted to extremism - ibnlive.com, reproduced from wikileaks.ch

ஹிந்து புரோகிதர் இஸ்லாத்தில் இணைந்தார்


சுஷில் குமார் ஷர்மா எனும் அப்துர் ரஹ்மான் ஹரியானா மாநிலத்தில் உள்ள அமதல்பூர் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர். அக்கிராமத்தில் உள்ள கோவிலில் மத சடங்குகளை செய்யும் இந்து வைதீக குடும்பத்தில் பிறந்தவர்.மே மாதம்12,2002 அன்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு பணி நிமித்தமாக வந்தார்.
ஜித்தாவில் கம்பெனி இருப்பிடத்தில் தங்கி இருந்த போது உடன் வேலை செய்யும் ஒரு நண்பர் சில இஸ்லாமிய புத்தகங்களை கொடுத்துள்ளார். பிறகு சுஷில் குமார் சர்மா ரியாத் நகரில் உள்ள நௌரா மகளிர் பல்கலைகழகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அப்துர் ரஹ்மான் கூறுகிறார்.
நௌரா மகளிர் பல்கலைகழகத்தில் கம்பெனி கேம்ப்-ல் இஸ்லாத்தை பற்றி கூறிய நிறைய இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பல நண்பர்களை சந்தித்தேன். அவர்கள் ஒய்வு நேரத்தில் இறைத்தூதர்கள் பற்றியும், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களது பொன்மொழிகள் பற்றியும் கூறுவார்கள்
எனது இதயம் நடுக்கத்திற்கு உள்ளானது. எனது மரணத்திற்கு பிறகு எனது நிலை என்னவாகும்? என்னுடைய பாவங்கள் என்னை நரகத்திற்கு கொண்டு சேர்க்குமா? என்று என்னை நானே கேட்டு கொண்டேன்.நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின் மண்ணறை வேதனை பற்றி நான் மிகவும் அச்சப்படேன்.
தூக்கமின்றி இரவுகளை கழித்தேன். இஸ்லாத்தை தழுவவும், முஹம்மது நபி(ஸல்) அவர்களை உண்மையாக பின்பற்றுபவனாகவும் மாற இதுவே சரியான தருணம் என உணர்ந்தேன்.என்னுடைய வாழ்வின் உண்மையின் தேடுதல் இஸ்லாத்தில் முழுமை அடைந்தது.
                                                    
இன வேறுபாடுகள் இல்லாமல் சகோதரத்துவத்தை பேணும் பண்பே இஸ்லாத்தை நோக்கி என்னை ஈர்த்தது.
அல் ஃபத்தாவில் உள்ள இஸ்லாமிய அழைப்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்னை கலிமா கூற இமாம் அவர்கள் அழைத்தார்.
“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்” என்று முழுமனதுடன் கூறினேன்.இமாம் அவர்கள் அப்துர் ரஹ்மான் என்று எனது பேரை மாற்றி கொள்ள ஆலோசனை வழங்கினார்கள்.நானும் உடனே முழுமனதுடன் ஒப்புக்கொண்டேன்.
எனக்கு மனைவியும் 16 வயதில் மற்றும் 7 வயதில் இரு மகன்களும் உள்ளனர். இஸ்லாமிய தூதை என்னுடைய குடும்பத்திற்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு என் முன்னால் இருக்கிறது. நான் தொலைபேசி மூலம் இஸ்லாத்தை தழுவியதை குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்கள் முதலில் நம்பவில்லை. என்னுடைய மனைவி நான் விடுமுறைக்கு இந்தியா வரும் போது முடிவு செய்வதாக கூறுகிறாள்.
ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் என குடும்பத்தாருக்கு நேர்வழி காட்டவும் அவர்களுடைய இதயங்களை இஸ்லாத்தின் பால் இணக்கமாக்கவும் கண்ணீரோடு அழுது பிரார்த்தித்து கொண்டே இருக்கிறேன்.
ஊர்மக்கள், உறவினர்கள், குடும்பத்தாரின் எதிர்ப்புகளை நான் சந்திக்க வேண்டியிருக்கும்.ஆனால் அவற்றை எதிர்கொள்ள நான் உறுதியாக இருக்கிறேன். “அல்லாஹ் எனக்கு உதவி செய்வான்” என உறுதியாக நம்புகிறேன்.
“இம்மை மறுமையில் வெற்றி பெற இஸ்லாத்தை தழுவுங்கள் என்று முஸ்லிமல்லாத சகோதரர்களை பார்த்து அப்துர் ரஹ்மான் இறுதியாக அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.”
                                                                                                                   -சவுதிகேசட்  நியுஸ்

Thursday, January 27, 2011

யார் இந்த ஷிஆக்கள்?


வரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு





 வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை உலகிற்கே வழிகாட்டியாக இருந்து முஸ்லிம்கள் விளக்கியுள்ளார்கள்.
 "ஆராயாமல் செய்திகளைப் பரப்பாதீர்கள்" என்ற இறைவனின் கட்டளைக்கு இணங்கியே இவர்கள் வரலாற்றை அணுகியுள்ளனர். வரலாற்றை வரையக்கூடிய கலை தான் "வரலாற்று வரைவியல்"(Historiagraphy). வரலாற்றை எழுதுவதற்கான முறைமையையும் உலகிற்குக் கற்றுத் தந்தவர்கள் முஸ்லிம்களே. இத்தகைய பெருமைக்குரிய முஸ்லிம் வரலாற்று அறிஞர்களில் சிலரை இந்தக் கட்டுரையில் காண்போம். எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.

வரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு

முஸ்லிம் வரலாற்று வரைவியலின் தோற்றம் என்பது முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே நிறுவப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தங்களின் கைகளாலேயே வரலாற்றை எழுதத் துவங்கினர். அதாவது, தங்களின் பாரம்பரிய வரலாற்றினைத் தாங்களே தொகுத்து விடுவர். மேலும் முஹம்மத்(ஸல்) அவர்களுடனான தங்களின் பாரம்பர்ய தொடர்புகளைப் பற்றிய வரலாற்றினைப் பதிவு செய்து வந்தார்கள்.(நபிமொழி அறிவிப்பாளர் தொடர் வரிசை)

ஆரம்ப கால முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் தங்களின் மார்க்கம் மற்றும் அரசியல் சார்ந்த வரலாற்றில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்தனர்.

இவர்கள் பெரும்பாலும் நபி(ஸல்) அவர்களின் வரலாற்றையும் முஸ்லிம்களின் வெற்றிகளைப் பற்றியும் எழுதி வந்தார்கள்.அத்துடன் இஸ்லாமியக் கலாச்சாரம், அரசியல் வளர்ச்சி, கலீஃபாக்களின் காலத்தில் அவற்றின் நிலை ஆகியவற்றையும் பதிவு செய்தார்கள்.

நபி(ஸல்) அவர்களைப் பற்றி முதலாவதும் முக்கியத்துவமும் வாய்ந்த வரலாற்றை எழுதியவர் இப்னு இஸ்ஹாக். இவர் எழுதிய நூலின் பெயர்: "The Biography of the Prophet" இதில் நபி(ஸல்) அவர்களுடைய பாரம்பரியம், இஸ்லாத்தின் தோற்றம், வளர்ச்சி போன்றவற்றைப் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த நூலானது சிறப்பு வாய்ந்ததாகவும் பின்னர் வந்த முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் அந்த நூலில் உள்ள விஷயங்களை சுதந்திரமாக எடுத்தாள்வதற்கும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றிய மற்றுமொரு வரலாற்று நூல் இப்னு ஹிஷாம் எழுதிய "Biography of Prophet(Sal)". இந்த நூலிலுள்ள பெரும்பாலான விஷயங்கள் இப்னு இஸ்ஹாக் உடைய நூலிலிருந்து எடுத்து ஆளப்பட்டவையே.

பெரும்பாலான முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான போர்களையே பதிவு செய்துள்ளார்கள். அப்பாஸிய கலீஃபாக்களின் ஆஸ்தான வரலாற்றாசிரியர் அல் வாஹிதி(747-823) இது பற்றி நிறைய நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் "History of the Wars of the Prophet" எனும் நூல் புகழ் பெற்றது. மற்றுமொரு சிறந்த வரலாற்றாசிரியர் அல்-பலதூரி ஆரம்ப கால முஸ்லிம் வெற்றிகள் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பினை "கான்குட்ஸ் ஆப் தி கண்ட்ரீஸ்" எனும் தலைப்பில் எழுதியுள்ளார். இவை தவிர, புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்களான அல் தினாவரியின் ஹிஸ்டரி ஆப் அரேபியா அண்ட் பர்ஷியா" நூலும் இப்னு அலீ தாஹிரின் "தி ஹிஸ்டரி ஆப் பாக்தாத் அண்ட் இட்ஸ் கலீப்ஸ்" எனும் நூலும் புகழ் பெற்றதாகும்.

இது போல வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் உலகப் புகழ் பெற்ற முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களையும் அவர்கள் தம் நூல்களையும் இந்த உலகம் கண்டுள்ளது. அவர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் இங்கு நினைவு கூர்வது நம்முடைய வரலாறுகளை நமக்குத் தந்த முன்னோர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் அவர்கள் இந்த உலகிற்கு ஆற்றிய சேவைகளைத் தெரிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

அல்-தபரீ (838-923)

உலகத் தரம் வாய்ந்த முஸ்லிம் வரலாற்றாசிரியர்களில் மிகவும் முதன்மையானவர் இவரே. இவர் எழுதிய "தி அன்னால் ஆப் தி அபோஸ்டல் அண்ட் கிங்ஸ்" எனும் முன்னோர்களைப் பற்றிய வரலாற்று நூல் மிகவும் புகழ் பெற்றதாகும்.அல் தபரீ

அந்த நூலில் கி.பி. 915 வரை வாழ்ந்த முன்னோர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவு செய்துள்ளார். இதற்காக அவர் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளார்.

மேலும் ஷரீஅத் சட்டத்தில் ஆழ்ந்த அறிவையும் பெற்றுள்ளார். கால அட்டவணையை முறையாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்திய முதல் முஸ்லிம் வரலாற்றாசிரியரும் இவரே. அல் தபரீ வரலாற்று ஆய்விற்காகப் பயன்படுத்திய நெறிமுறைகள் இன்றளவிலும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

அல் மஸ்ஊதி

மத்திய காலப்பிரிவில் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர் இவர். மேலும் இவர் சிறந்த Enotclopaedist என்றும் அழைக்கப்படுகிறார். அல் தபரீ பயன்படுத்திய கால அட்டவணையை இவர் மன்னர்கள், ஆட்சி மற்றும் தலைப்புகளின் கீழ் அதனைப் பிரித்து எழுதியுள்ளார்.அல் மஸ்ஊதி

இவருடைய நூல்களில் சிறந்தது "Meadow of Gold" ஆகும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இவர் அரசியல் நடவடிக்கைகளைக் குறிப்பிடும் போது அதனுடன் சேர்த்து மக்களுடைய கலாச்சார மற்றும் சமூக வாழ்வினை இணைத்தே வரலாற்றைத் தந்துள்ளார். இவருடைய வரலாற்று ஆய்வுகளில் அனைவராலும் பொறாமை கொள்ளத்தக்க ஓர் ஆய்வு "Herodotus of the Arabs" எனும் நூலாகும்.

மிஸ்காவைஹி

அரபு வரலாற்று ஆய்வுகள் மிகவும் உச்ச நிலையை அடைந்தது மிஸ் காவைஹியின் எழுத்துகள் மூலமே. ஏனெனில் முன்னர் கூறிய வரலாற்றாசிரியர்களை விட இவர் முதல் தர (நம்பத்தகுந்த) தகவல்களைத் திரட்டுவதில் கைதேர்ந்தவராக இருந்தார்.

தற்போது இதனை Primary Sources என்று கூறுகிறார்கள். குறிப்பாக, நிர்வாகம் மற்றும் இராணுவம் தொடர்பான தகவல்கள். இதனை இவர் எழுதிய "Experiences of the Nations" எனும் நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

மற்றுமொரு சிறப்பு, இவருடைய பாரபட்சமற்ற தன்மை. மிகச் சிறந்த முஸ்லிம் ஆட்சியாளர்களின் காலத்தில் இவர் வழங்கிய தீர்ப்புகள் மிகவும் நேர்த்தியானவை.

மிக்ரிஷி (1360-1442)

எகிப்தைப் பற்றி எழுதிய முஸ்லிம் வரலாற்றாசிரியர் தான் மிக்ரிஷி. இவர் எகிப்து முஸ்லிம்களின் வரலாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள புவியியல் அமைப்பு போன்றவற்றைத் தந்துள்ளார். இவர் பாதிம்களுடைய மற்றும் மம்லூக் சுல்தான்களுடைய வரலாற்றையும் எழுதியுள்ளார்.

இவருடைய மற்றுமொரு சிறந்த வரலாற்றுப் பங்களிப்பு "Encyclopaedia of Egyptian Biography"  ஆகும். இவர் எழுதிய வரலாற்று நூல்கள் மிகவும் ஆதாரப்பூர்வமானவையாக இருந்த போதிலும் இவர் ஓர் ஆய்வாளர் கிடையாது என்பது தனிச் சிறப்பாகும். ஆயினும் இவர் எழுதிய "இடைக்கால கெய்ரோ" உலகிற்குக் கிடைத்த மிகவும் விரிவான, மதிப்பு வாய்ந்த ஆய்வாகும்.

அல் பிரூனி (973-1048)

அல் பிரூனிமுஸ்லிம்களின் பாரம்பர்ய வரலாற்றினை முன்னோர்களின் வரிசைக் கிரமப்படி(chronology) மூலம் ஆய்வு செய்து நூல்கள் வெளியிட்ட மற்றொரு சிறப்புக்குரிய வரலாற்றாசிரியர் தான் அல் பிரூனி. சிலகாலம் இந்தியாவிலும் தங்கியுள்ளார். இந்து கலாச்சாரத்தின் நிலை குறித்து இவர் கி.பி. 1080 -இல் எழுதிய "கிதாபுல் ஹிந்த்" மிகப் புகழ் பெற்றதாகும். இந்துக் கலாச்சாரத்தின் நல்ல - தீய அம்சங்களை அவர் அதில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவர் செய்த இந்த ஆய்வு ஆரம்பகால சிலைவணங்கிகளின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

அலீ அல் தனாகி(969-94)

"Collections of Histories" எனும் நூல் மூலம் சிறப்பு பெற்றவர் தனாகி. முஸ்லிம்களுடைய தொடர்புகளைப் பற்றியும் பின்பற்றப்பட்ட வரலாற்று முறைகள் பற்றியும் இவர் எழுதியுள்ளார். "The History of Damascus" எனும் நூலின் மூலம் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் அல் ஹஸன்(1121 - 93) ஆவார்.

வரலாறு என்பது மாறக்கூடிய தன்மை கொண்டது. அதற்கென உள்ள தன் சக்தியின் மூலமே அது வளர்ச்சி பெறுகிறது. மேலும் வரலாற்றில் மாற்றம் என்பது சுழற்சி முறையில் ஏற்படும் என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டவர். சமூகம் மற்றும் உயிரினங்கள் நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கையே வாழ்கின்றன. ஒரு சமூகம் இரண்டு நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. ஒன்று ஊரகம்; இரண்டு நகர்ப்புறம். இதில் ஊரகத்திலிருந்து அந்தச் சமூகம் நகரத்திற்கு வரும் போது அதன் உள்ளார்ந்த சக்தி சீரான அளவில் குறைகிறது. இவ்வாறு அதன் சக்தி குறைந்தாலும் கலை, அறிவியல், தொழில்நுட்பம், வாழ்க்கைத் தரம் போன்றவற்றில் அபரிதமான வளர்ச்சியைக் காண்கிறது. அதே நேரத்தில் தனது முரட்டுப் பிடிவாதம் மற்றும் மூர்க்கத்தனத்தை இழக்கிறது. சுருங்கக் கூறின் செல்களின் வளர்ச்சியைப் போல சிலர் பிறப்பதும் பின்னர் இறப்பதும் தத்துவார்த்த முறைகளிலேயே நடைபெறுகிறது என வரலாற்றினை விளக்குகிறார்.

ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகின்றன. அதற்கான காரணத்தை அதன் சுற்றுச்சூழல், வானிலை, அந்த நிலத்தின் தன்மை போன்றவற்றின் மூலம் ஆராய முற்படுகிறார் இப்னு கல்தூன். மதத்தின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்துள்ளார். தூதுத்துவத்திற்கும் மதரீதியான ஆளுமைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார். வரலாற்றுக்கான தெய்வீகக் காரணங்களை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் தனது "Universal History" எனும் நூலில் தருகிறார். பேராசிரியர் பர்னஸ் இவரைப் பற்றி கூறும் போது, "மத்திய கால வரலாற்று வரைவியலாளர்களில் இப்னு கல்தூன் ரோஜர் பேகனாக இருந்தார்".

பேராசிரியர் ராபர்ட் பிளிண்ட் கூறுகையில், "இப்னு கல்தூன் வரலாற்று வரைவியலுக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார். வரலாற்றை சிறப்பு அறிவியலாக மாற்றிய பெருமை இப்னு கல்தூனுக்கு உண்டு" என்கிறார்.

இவருடன் மத்திய காலப் பிரிவில் (அ) இடைக் காலத்தில் வாழ்ந்த மற்ற புகழ் பெற்ற முஸ்லிம் வரலாற்றாசிரியர்களில் சுல்தான் ஸலாஹுத்தீன் வரலாற்றை எழுதிய பஹாஅத்தீன், உலகப் புகழ் பெற்ற முஸ்லிம்களின் வரலாற்றை எழுதிய இப்னு சவாது, அறிஞர்களின் அகராதி எழுதிய யாகூத், வரலாற்று அகராதி எழுதிய இப்னு கல்லிக்கன் போன்றோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இப்னு கல்லிக்கன் சுமார் 865 புகழ்பெற்ற முஸ்லிம்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துள்ளார்.

நவீன கால வரலாற்றாசிரியர்களில் இந்தியாவைச் சேர்ந்த முஹம்மத் இக்பால் குறிப்பிடத்தகுந்தவர். வரலாற்றின் பொருள் மற்றும் தன்மை குறித்து இவர் தனது The Reconstruction of Religious Thought in Islam (1930)எனும் நூலில் விளக்கியுள்ளார். வரலாற்றின் முக்கியத்துவம் கடவுளிடம் மனிதனை இணைப்பது தான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தனித்தன்மைக்கு வரலாற்றில் மிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இறைவன் தான் இந்த உலகைப் படைத்து மனிதன் வாழ்வதற்கான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளான் என்பதில் உறுதி கொண்டிருந்தார்.

இவரைப் போல இன்னும் பல முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் இந்த உலகிற்குப் பல நன்மைகளைச் செய்துள்ளார்கள். இவர்களைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் இந்த முஸ்லிம் உம்மத்தில் இன்றைய இளைஞர்களிலிருந்து உருவாக வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக.

நன்றி: ஹாஜா ஹமீதுல்லாஹ்(16-31 ஆகஸ்ட் 2007 சமரசம் இதழ்)

Tuesday, January 25, 2011

யூசுப் எஸ்டஸ்..


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சாமாதானமும் நிலவுவதாக...ஆமின்...

யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.

மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...  

இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ் 

யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).

இவர் வாழ்வின் முக்கியமான மாற்றத்தை ஏற்ப்படுத்திய அந்த ஆண்டு 1991. யூசுப் எஸ்டஸ் அவர்கள் செல்வ செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரும் இவரது தந்தையும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்தவர்கள். தொழிலை கவனித்துக்கொண்டே கிருத்துவத்தையும் போதித்து வந்தார். இறைபக்தி அதிகம் உடையவர்.       

1991 ஆம் ஆண்டு, ஒரு வியாபார விஷயமாக எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் அவர் வாழ்வை திருப்பிப்போட்ட சமயமும் கூட.

அப்போது வரை யூசுப் எஸ்டஸ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி எண்ணியிருந்தது ...

"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பாலைவனத்தில் இருக்கும் ஒரு கருப்பு வடிவத்தை வணங்குபவர்கள், தினமும் ஐந்து முறை தரையை முத்தமிடுபவர்கள்...இது தான் இஸ்லாத்தை பற்றி நான் அறிந்திருந்தது"

"1991 ஆம் ஆண்டின் முற்பகுதி, எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பவருடன் தாம் வியாபார ஒப்பந்தம் செய்யப்  போவதாக என் தந்தை என்னிடம் கூறினார். என்ன முஸ்லிமுடனா?, நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தந்தை வேறு வழி இல்லையென்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.    

இது வியாபாரம் என்பதால் என்னால் முஹம்மதை நிராகரிக்க முடியவில்லை. சரி அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம். உண்மையான என்னுடைய மார்க்கத்தையும் அவருக்கு போதிப்போம். இதுதான் நான் முதலில் நினைத்தது... 

நான் அவரை சந்திக்க தயாரானேன். ஏசு என் கடவுள் (Jesus is my Lord) என்று எழுதப்பட்டிருந்த ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு, கழுத்தில் ஒரு பெரிய சிலுவையை அணிந்து கொண்டு, கையில் பைபிளை வைத்துக்கொண்டு அவரை வரவேற்க காத்திருந்தேன்.    

முஹம்மதும் வந்தார். நான் அதிக நேரம் வீணாக்கவில்லை...

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?


ஆம்...

ஆச்சர்யமான பதில். நான் தொடர்ந்தேன். இப்ராகிம்(அலை), இசாக்(அலை), இஸ்மாயில்(அலை) என்று பைபிளில் இருக்கும் நபிமார்களிடம் இருந்து ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பலமுறை அவருடன் என் மார்க்கத்தை பற்றி பேசியிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தான் வென்றதாக நினைப்பேன். ஆனால் இன்றோ, அதைப் பற்றியெல்லாம் நினைக்கும் போது, உண்மையில் முஹம்மது தான் வென்றார் என்பது புரிகிறது.                 

முஹம்மதின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. முஹம்மதை அவர் வழியில் விட்டுவிடுமாறு என் தந்தை என்னிடம் கூறினார். என்ன, இப்படி ஒரு பண்புள்ளவர் ஒரு  தவறான கொள்கையில் இருப்பதா? இல்லை.. இவரை எப்படியாவது என் மதத்திற்கு அழைத்து வருவேன். 

  
இதற்கு நான் முதலில் செய்தது, அவரை என் வீட்டிலேயே குறைந்த வாடகைக்கு தங்க வருமாறு அழைத்தது. பணம் முக்கியமல்ல, அவருக்கு நான் கொடுக்கக் கூடிய போதனை தான் முக்கியம். முஹம்மதும் எங்களுடன் தங்க ஒப்புக்கொண்டார்.

இது நடந்து கொண்டிருந்த அதே வேலையில், என்னுடைய நண்பரான மதகுரு ஒருவர்(Priest, father) மாரடைப்பு காரணமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தினமும் சென்று சந்தித்து வருவேன். அப்போது அந்த அறையில் தங்கிருந்த பாதர் பீட்டர் ஜகோப்ஸ் (Father Peter Jacobs) அவர்கள் எனக்கு நன்கு பழக்கமானார். அவரும் மாரடைப்பு காரணமாக தான் அந்த மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

நலமாகி வந்தவுடன் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் எங்களுடன் வசிக்க சம்மதித்தார்.

இதுதான் நான் எதிர்பார்த்த நேரம். மாட்டினார் முஹம்மது. இப்போது ஒரே வீட்டில் நான், என் மனைவி, என் தந்தை மற்றும் பாதர் பீட்டர் ஜகோப்ஸ், எல்லோரும் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். இனி முஹம்மதை எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடவேண்டியதுதான். 

ஒவ்வொரு நாளும், இரவு உணவின் போது நாங்கள் அனைவரும் முஹம்மதை சுற்றி அமர்ந்து கொள்வோம். கேள்விகளை தொடுப்போம். 

பல கேள்விகள்...

நாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பைபிளை வைத்திருப்போம், உதாரணத்துக்கு நான் RSV (Revised Standard version) பைபிள், என் தந்தை கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James version) பைபிள் என்று பல பைபிள்கள்"

கிருத்துவத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இங்கு ஒரு தகவல். கத்தோலிக்க கிருத்துவர்களின் பைபிள் 73 புத்தகங்களை கொண்டது. protestant கிருத்துவர்களின் பைபிள் 66 புத்தகங்களை கொண்டது.   

"ஆனால் முஹம்மதோ ஒரே ஒரு புத்தகத்தை கொண்டு வந்து வைத்தார். அது கடவுளிடமிருந்து வந்தது என்றும், அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாதது என்றும் கூறினார். இது எனக்கு ஆச்சர்யமான தகவல்கள். 

பிறகு ஒருமுறை திரித்துவத்தை (Trinity, it is nothing but a christian belief that teaches the unity of Father, Son, and Holy Spirit as three persons in one Godhead). பற்றி விவாதம் திரும்பியது. முஹம்மது, திரித்துவத்தை லாஜிக்காக நிரூபியுங்கள் என்று கேட்டார்...

என்ன லாஜிக்கா? மதம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது, இங்கு லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது...

எங்கள் மார்க்கத்தில் இரண்டும் உண்டு....

இது போன்ற பதில்கள் தான் எங்களை திக்குமுக்காட செய்தன... நான் வீம்புக்காக அவருடன் வாதம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் அவருடைய பதில்களில்தான் அதிகம் அர்த்தமிருந்தது...இப்படியே சில நாட்கள் சென்றன..

ஒருமுறை பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள், முஹம்மதிடம், தன்னை மசூதிக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சென்று வந்த அவரிடம்... 

பாதர்...அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பலி கொடுத்து இறைவனை வணங்கி கொண்டிருந்தார்களா? 

இல்லை..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...வந்தார்கள், தொழுதார்கள், சென்றுவிட்டார்கள்...

என்ன அவ்வளவுதானா....எந்த மாதிரி பாடல்களை பாடினார்கள்? எந்த மாதிரி இசைக்கருவிகளை வைத்திருந்தார்கள்? 

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை?

என்ன இசைக்கருவிகள் இல்லாமல் கடவுள் வழிப்பாடா? 

இவையெல்லாம் எனக்கு வியப்பை தரும் தகவல்கள். முஸ்லிம்களின் கடவுள் வழிபாடு என்பது மிகவும் எளிதான, வலிமையான ஒன்று என்பதை புரிந்துக்கொண்டேன். 

இஸ்லாம் என்னை நெருங்கி வந்துக்கொண்டே இருந்தது. இப்போது என் மதத்தில் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்...

சில தினங்களுக்கு பிறகு, பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் மறுபடியும் முகம்மதுடன் மசூதிக்கு சென்றார். அவருக்காக நான் காத்திருந்தேன். இந்த முறை என்ன புது செய்தி கொண்டுவருவார் என்று பார்ப்பதற்காக.                

கார் வந்தது, இருவர் இறங்கினார்கள். ஒருவர் முஹம்மது, அது எனக்கு நன்றாகவே தெரிந்தது, யார் அந்த மற்றொருவர்?, நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர்?...

உற்று கவனித்தேன்....என்னால் நம்பமுடியவில்லை...பாதர் பீட்டர் ஜகோப்ஸ்சா அது? ஆம் அவரேதான்...என்ன, அவர் இப்போது முஸ்லிமா? அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர்? அதிர்ச்சியில் உறைந்தேன். 



பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் என்னிடம் வந்தார், 

நிச்சயமாக இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்...   

நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்னிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தியது அது. 

மாடியில் இருந்த என் மனைவியிடம் சென்றேன்.

கவனித்தாயா?, இப்போது பாதர் பீட்டர் ஜகோப்ஸ் ஒரு முஸ்லிம். இஸ்லாமிய மார்க்கம் நான் நினைத்தது போல் இல்லை, அது எனக்கு நல்ல மார்க்கமாகவே படுகிறது.

எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்...

ஹேய்... இரு..................இரு..................நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டாயா? நான் முஸ்லிமாகவில்லை, அவர்தான் முஸ்லிம். நான் இன்னும் கிருத்துவன் தான். அப்படியே நான் முஸ்லிமாகினாலும் நீ என்னுடன் தாராளமாக வாழலாம், ஏனென்றால் ஒருமுறை முஹம்மது சொல்ல கேட்டிருக்கிறேன், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்தான் கிருத்துவ ஆணை திருமணம் செய்யக்கூடாது...

அதனால் தான் கேட்கிறேன் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று...

என்ன? 

ஆம், முஸ்லிம் பெண்ணாகிய என்னால் கிருத்துவ ஆணாகிய உங்களுடன் வாழ முடியாது...                           

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...நான் நிதானத்திலேயே இல்லை...சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டேன்...

இரு...அவரசப்படாதே, உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். இஸ்லாம் எப்போதோ என் மனதில் வந்து விட்டது. நானும் முஸ்லிம்தான்.. 

என் மனைவி என்னை நம்பவில்லை. 

ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள், தயவு செய்து இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்...

நான் வெளியே வந்து விட்டேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தூக்கம் சரிவர வரவில்லை. எழுந்து சென்று முஹம்மதை எழுப்பி வெளியே அழைத்து சென்றேன். ஏதேதோ பேசுகிறேன் அவரிடம், ஒன்றும் புரியாமல்... இப்போதும் அவர் பொறுமையாகவே பேசினார், விளக்கினார். 

சுப்ஹு நேரம் நெருங்கி விட்டது, முகம்மதுடன் நானும் பள்ளிக்கு சென்றேன். அந்த பிளைவூட் தரையில் சஜிதா செய்தேன். 

இறைவா எனக்கு நல்வழி காட்டு....

இருவரும் வீட்டிற்கு வந்தோம். முஹம்மது மற்றும் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் சஹாதா சொன்ன சிறிது நேரத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சுபானல்லாஹ்...

என் தந்தையிடம் விஷயத்தை சொன்னேன். 

நான்தான் அப்போதே கூறினேனே இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கமென்று. எனக்கு நீ இஸ்லாத்தில் இணைந்தது மகிழ்ச்சிதான். 

dad,..... அப்போ நீங்கள்? 

இந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. மாதங்கள் சென்றன. எப்போதும் என்னை மசூதியில் விட வரும் என் தந்தை சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்தார்.

பலரும் என்னிடம் வந்து கேட்க ஆரம்பித்தனர்...

எப்பொழுது உங்கள் தந்தை இஸ்லாத்தை தழுவினார்? 

நான் விளக்கமளித்தேன். ஒரு சமயத்தில் இந்த கேள்விகள் அதிகமாகவே, நான் அவர்களிடம், 

நீங்கள் ஏன் அவரிடமே இந்த கேள்வியை கேட்கக்கூடாது? 

அவர்கள் அவரிடம் சென்று அந்த கேள்வியை கேட்டனர்... 

அவர் கூறினார் "கடந்த ஒரு வருடமாக...."

சுபானல்லாஹ்...நான் இப்போது, நடந்ததையெல்லாம் திரும்பி பார்க்கிறேன். ஆம் முஹம்மது வென்றுவிட்டார். ஆனால் நானும் வென்றுவிட்டேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதினால்..."

யூசுப் எஸ்டஸ் அவர்களுடைய இந்த வரலாற்றை அவர் சொல்ல நீங்கள் கேட்க வேண்டும். மிகுந்த நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லுபவர். 

இப்போது யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பலரையும் இஸ்லாத்தில்பால் அழைத்து வருகிறார். சென்னைக்கும் ஒருமுறை வந்திருக்கிறார். பல இணையதளங்களை நடத்திவருகிறார்.

இறைவன் இவருக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுப்பானாக...ஆமின்

இவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு...அது "ATHEIST KILLER" என்பது...ஏன்? இவரது சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்...

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

References:
1. Sheikh Yusuf Estes talk on "priests and Preachers Coming to Islam" - for Islam today.
2. Sheikh Yusuf Estes interview on "How he came to Islam" with eddie - for thedeenshow.   
3. Sheikh Yusuf Estes "How Yusuf estes came to Islam" - Islamtomorrowdotcom/yusuf_story.htm

பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு


பிரச்சினை உருவான விதம்
54216710981949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.
வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.
அயோத்தியில் ராமர் பிறந்தாரா?
அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.
இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.
இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:
கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.
கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.
கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.
இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.
இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.
அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.
ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.
அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.
இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.
இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?
இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.
‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.
அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.
அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.
மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.
எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.
இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.
அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?
‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.
குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.
கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்
பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.
‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?
இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.
அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.
மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.
இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.
இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.
உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.
பாபர் கோவிலை இடிப்பவரா?
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,
”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்
”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.
1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.
1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.
எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போ