Wednesday, June 14, 2017

Did the Hindus never eat beef?’

டாக்டர் அம்பேத்கரின், ‘Did the Hindus never eat beef?’ நூலிலிருந்து சில பகுதிகள், சுருக்கமான மொழிபெயர்ப்பில்.

"இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது!" - விவேகானந்தர் (The Complete Works of Swami Vivekanand, vol.3, p. 536).

"பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்" - ரிக் வேதம் (10/85/13)

"இந்திரனுக்கு பிடித்த இறைச்சி பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்". - ரிக் வேதம் (6/17/1)

"பரோபகரம் இடம் ஷரீரம்" என்பது இந்து தர்ம சாஸ்திரத்தின் கூற்றாகும். அதாவது இவ் உடல் இறைவனால் கொடுக்கப்பட்டதே, பிறருக்கு உதவவே! அதன் அடிப்படையில்...

இறைச்சிக்குரிய மிருகங்களை மனிதர்கள் உண்ணுவது பாவமில்லை. உண்ணுபவர்களையும் உணவுகளையும் பிரம்மனே படைத்தான். - மனு ஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 30)

அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன், 21 ஜென்மங்களுக்கு, பலியிடும் விலங்காக உருவெடுப்பான். - மனு ஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 35)

ஒரு பிராமணர், வழிபாட்டின்போது தனக்குக் கொடுக்கப்பட்ட இறைச்சியை உண்ண மறுத்தால் நரகம் செல்வார்.
வசிஷ்ட முனிவர் (11/34)

விருந்தினர் வந்தால் பசு மாட்டின் இறைச்சி அளிப்போம். - அபஸ்டாம் கிரிசூத்திரம் (1/3/10)

மிக மிருதுவாகவும், சுவையாகவும் இருப்பதால் பசு மாட்டிறைச்சியை உண்கிறேன். - இராமாயணத்தின் மகரிஷி யாக்யவல்க்கியர் (சீதையின் தந்தையின் குரு) சத்பத் பிராமணம் (3/1/2/21)